அலோர் காஜா தமிழ்ப்பள்ளி: Difference between revisions
(Added stage template) |
No edit summary |
||
Line 73: | Line 73: | ||
* 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக்கல்வி அமைச்சு, 2016 | * 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக்கல்வி அமைச்சு, 2016 | ||
{{Ready for review}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:மலேசிய பண்பாடு]] | [[Category:மலேசிய பண்பாடு]] |
Revision as of 17:32, 8 March 2024
அலோர் காஜா தமிழ்ப்பள்ளி மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இப்பள்ளியின் மலேசியக் கல்வி அமைச்சுப் பதிவெண் MBD0061.
பள்ளி வரலாறு
அலோர்காஜா தமிழ்ப்பள்ளி 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிளெமாக் தோட்ட நிர்வாகி W.R மில்லர் தலைமையில் திரு V.S இராமன், திரு S. சண்முகம், திரு P.K முனியாண்டி, திரு S. சிதம்பரம், திரு S.N தாவுது, திரு C.M சேத் ஆகியோர் கொண்ட குழுவொன்று பள்ளிக் கட்டுமானத்துக்கான நிதி திரட்ட அமைக்கப்பட்டது. மாவட்டத் தோட்ட நிர்வாகிகள், பொதுமக்களின் நிதியுதவியுடன் முப்பதாண்டு குத்தகை முறையில் அரசு அளித்த 2 ஏக்கர் நிலத்தில் பள்ளிக் கட்டடம் எழுப்பும் பணிகள் 6.8.1949 அன்று தொடங்கப்பட்டது.
பள்ளிக் கட்டட வரலாறு
1950 ஆம் ஆண்டு நான்கு வகுப்பறைகளும் ஒர் அலுவலகமும் கொண்ட கட்டடம் எழுப்பப்பட்டது. 4.5.1950 இல் 90 மாணவர்களுடன் பள்ளி செயற்படத் தொடங்கியது. மாணவர் எண்ணிக்கை உயர்வால் 1959 ஆம் ஆண்டு மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. தொடர் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் பள்ளியில் மாலைநேர வகுப்புகள் நடத்தப்பட்டன. 1969 இல் மாநில கல்வி இலாகாவின் உதவியுடன் மேலும் இரண்டு வகுப்பறைகள், ஒர் ஆசிரியர் அறை, ஒர் அலுவலகம், சிற்றுண்டிச்சாலை, கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டன.
1993 ஆம் ஆண்டு ரிங்கிட் மலேசியா 38000 வெள்ளி செலவில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன. 1995 ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் மேலும் மூன்று வகுப்பறைகளும் ஒரு கிடங்கும் அமைக்கப்பட்டது. அதன் பின் காலவதியான பள்ளியின் நில உரிமம் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அம்முயற்சி அப்போதைய ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவிடம் முன்வைக்கப்பட்டது. 24 லட்சம் செலவில் நான்கு மாடிக்கட்டடமாகக் கட்டப்பட்ட புதிய கட்டடம் 20.12.2010 அன்று டத்தோ ஸ்ரீ சாமிவேலுவால் திறந்து வைக்கப்பட்டது.
பள்ளித்தலைமையாசிரியர் பட்டியல்
எண் | தலைமையாசிரியர் பெயர் | பணியாற்றிய ஆண்டு |
1. | திரு மாணிக்கம் | (1950-1969) |
2. | திரு ஆரோக்கியசாமி | (1969-1972) |
3. | திரு பாக்ககிருஷ்ணன் | (1972-1973) |
4. | திரு சிங்கராஜூ | (1980 - 30.12.1980) |
5. | திரு சுப்பிரமணியம் | (1981-1987) |
6. | திரு கண்ணன் | (1987-1996) |
7. | திரு சுப்பராமணியம் | (1997-2007) |
8. | திருமதி புஷ்பராணி | (2007-2021) |
9. | திருமதி கமலா | (2021-2022) |
10. | திருமதி பார்வதி | (15.12.2022- இன்று வரை) |
பள்ளி முகவரி
Sekolah Jenis Kebangsaan (T) Alor Gajah
Alor Gajah
78000, Alor Gajah
Melaka, Malaysia
உசாத்துணை
- பள்ளி இதழ் 2022
- 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், மலேசியக்கல்வி அமைச்சு, 2016
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.