அருணாசலம் (ஆசையர்)

From Tamil Wiki
Revision as of 22:15, 8 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "அருணாசலம் (ஆசையர்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். சோதிடம் காரிகை இவரின் முக்கியமான படைப்பாகும். == வாழ்க்கைக் குறிப்பு == யாழ்ப்பா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அருணாசலம் (ஆசையர்) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். சோதிடம் காரிகை இவரின் முக்கியமான படைப்பாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமான அராலியில் அருணாசலம் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மாதகலைச் சேர்ந்த வித்துவ சிரோண்மணி சிற்றம்பலப் புலவருடைய மாணவர். பல தனிப்பாக்களைப் பாடியவர். சோதிடம் காரிகை என்னும் நூல்கள் இவரின் முக்கியமான படைப்புகளாகும்.

மாணவர்கள்

  • சண்முகச் சட்டம்பியார்
  • முத்துக்குமாரு

நூல்கள் பட்டியல்

  • சோதிடம் காரிகை

உசாத்துணை

  • Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
  • ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
  • சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
  • http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2