under review

அருங்கலச்செப்பு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
Line 23: Line 23:
{{finalised}}
{{finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 16:52, 12 October 2022

அருங்கலச்செப்பு

அருங்கலச்செப்பு (பொ.யு 7-ஆம் நூற்றாண்டு) தமிழில் எழுதப்பட்ட சமண அறநெறிநூல். இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன. இந்நூல் 'ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்ற வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு என்று கருதப்படுகிறது. சமண இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளை கூறுகிறது. இந்த நூலின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என நூலின் மொழி மற்றும் உட்குறிப்புகளைக்கொண்டு பொதுவாக மதிப்பிடப்படுகிறது. இது திருக்குறளின் வழிநூல் போன்றது.

ஆசிரியர்

இந்நூலாசிரியர் சமணர் என்பதை நூலில் பல இடங்களில் அருகதுதி வருவதிலிருந்து அறிய முடிகிறது. இதன் முதல்நூலான ரத்தின கரண்டகம் என்னும் சமணநூல் சிராவக ஆசாரம் ( இல்லறத்தோர் நெறி ) என்னும் பகுப்பில் வருவது. இந்நூலின் உள்ளடக்கத்தில் துறவறம் போற்றப்பட்டிருப்பதனாலும் (பாடல் 134 முதல் 149 வரை) காமம் அழிந்தபின் (காமம் சான்ற கடைக்கோட் காலை) இல்லறத்தோரும் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதனாலும் இதன் ஆசிரியர் ஒரு சமணத்துறவி எனக்கொள்ளலாம் என்று க.ப. அறவாணன் ஆய்வுரையில் சொல்கிறார்.

’நித்தம் அருகன் மலரடியை சித்தமதனில் மகிழ்ந்தேத்தி குற்றம் இல்லா இந்நூலை நக்கனையன் எழுதினேனே’ என இந்நூலில் ஒரு வரி வருகிறது. அது இந்நூலை படியெடுத்தவரின் பெயர் என மொழியமைப்பைக் கொண்டு ஆய்வாளர் முடிவுசெய்கிறார்கள்.

முதல்நூலின் ஆசிரியரின் பெயர் சமந்தபத்திரர் எனப்படுகிறது. இராஜாவளி கதை (தேவசந்திரர்) கதாகோசம் (பிரபாசந்திரர்) ஆகிய நூல்களில் இந்நூலாசிரியர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இவர் பெயரை சிராவணபெளகொளாவில் கிடைத்த சுவடிகள் சாந்திவர்மன் என்கின்றன. இவர் இயற்றிய ஜினஸ்துதி நூலில் சாந்திவர்மன் என்னும் பெயர் உள்ளது. சாந்திவர்மன் என்ற பெயரைக்கொண்டு இவர் பல்லவர் காலத்தவர் என்றும், இவருடைய நூல் தென்னாட்டிலேயே கிடைக்கின்றது என்பதனால் தென்னாட்டவர் என்றும் ஆய்வாளர் வகுக்கிறார்கள். ஆகவே சமந்தபத்திரர் என்னும் துறவியாக பின்னாளில் ஆன சாந்திவர்மர் பல்லவர் காலத்தவர் என்று கொள்ளலாம். அருங்கலச்செப்பில் மூலநூலாசிரியரை வழிநூலாசிரியர் போற்றிப் பாடாததில் இருந்து மூலம், வழிநூல் இரண்டையும் சாந்திவர்மரே எழுதியிருக்கலாம் என்று க.ப. அறவாணன் கருதுகிறார். நீலகேசி உரையில் இந்நூல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்நூல் பொ.யு ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் இயற்றப்பட்டது என்று க.ப. அறவாணன் கூறுகிறார்.

நூற்பெயர்

அருங்கலச்செப்பு என்பதற்கு அரிய நகைகள் வைக்கும் சிமிழ் என்று பொருள். சிலப்பதிகாரத்தில் 'ஆயிரங்கண்ணோன் அருங்கலச்செப்பு வாய் திறந்தன்ன’ என்று சொல்லப்படுகிறது. (இந்திரனின் அரியநகைப்பேழை திறந்ததுபோல). முதல்நூலின் பெயரின் நேரடி மொழியாக்கம் இது - ரத்தினம் (மணி) கரண்டகம் (செப்பு).

பதிப்பு

  • 1812-ல் ஐரோப்பிய ஆய்வாளர் எல்லீஸ் Tirukural on Virtue என்னும் நூலில் அருங்கலச்செப்பின் சில பாடல்களை மேற்கோள் காட்டினார்.
  • 1883-ல் நரியம்புதூர் குந்தியப்ப நைனார் மகன் பாகுபலி நைனார் என்பவர் புதுக்கோட்டை சமஸ்தான வித்வான் பா. முருகேச கவிராயரின் சகோதரர் பா. அரங்கசாமி உபாத்யாயரைக் கொண்டு பிழைநோக்கி தனது குமாரத்தி அம்மணியம்மாள் பொருட்டு காஞ்சிபுரம் திருவேங்கடமுதலியார் இயற்றமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் சுபானு வருஷம் ஆனிமாதம் (பொ.யு 1883) ஆறு அணா விலையில் அச்சிட்டு வெளியிட்டார். இதில் அணிமதிக்குடை என தொடங்கும் பாடல் இருக்கவில்லை.
  • 1941-ஆம் ஆண்டு விழுப்புரம் தாலுகா விடூர் ஏ. தர்ம சாம்ராஜ்ய சாஸ்திரியார் அவர்களால் திருத்தி எழுதி உரையுடன் வெளியிடப்பட்டது.
  • 1959-ல் மர்ரே ராஜம் கம்பெனியின் உரையுடன் கூடிய பதிப்பு
  • 1960-ல் பதிப்பாளர் சுகுமாரன் ஆய்வுரையுடன் கூடிய பதிப்பு
  • 1977-ல் க.ப. அறவாணன் உரையுடன் கூடிய பதிப்பு

உள்ளடக்கம்

இந்நூல் உட்பகுப்புகள் இல்லாத 180 குறள் வெண்பாக்களால் ஆனது. அறத்தை முன்வைக்கிறது. ரத்னத்ரயங்கள் எனப்படும் மும்மணிகளான நற்காட்சி. நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகியவை சமணத்தின் நெறிகள். அவற்றை இந்நூல் சீராக முன்வைக்கிறது. பின்னர் அம்மூன்றையும் விரிவாக எடுத்துரைக்கிறது.

உசாத்துணை


✅Finalised Page