அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்

From Tamil Wiki
Revision as of 22:31, 26 February 2022 by Subhasrees (talk | contribs) (அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890- ஜனவரி 23 1967) மிகவும் புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகர். ராகங்களைப் பாடுவதிலும் கற்பனைவளத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

இளமை, கல்வி

ராமானுஜ ஐயங்கார் காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்னும் ஊரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய தந்தையும் இசையறிவு மிக்கவர். ராமானுஜ ஐயங்காருக்கு உடன்பிறந்த இரு சகோதரர்கள் இருந்தனர். காரைக்குடி மலையப்ப ஐயரிடம் 3 ஆண்டு குருகுலமுறையில் இசைப் பயிற்சி பெற்றார். அவருடைய 18ஆவது வயதில் நரசிம்ம ஐயங்கார் என்பவரிடம் 5 ஆண்டுகள் குருகுலமுறையில் பல ராகங்களில் பாடும் பயிற்சி பெற்றார். இவர் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் மாணவராக இருந்திருக்கிறார்.

இசைப்பணி

கண்டனூர் என்னும் ஊரில் ஒரு திருமணத்தில் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரோடு சேர்ந்து அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் பாட ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கு கச்சேரிக்காக வந்திருந்த திருக்கோடிக்காவல் அழகுநம்பியாபிள்ளை, புதுக்கோட்டை மலையப்ப ஐயர், கனம் கிருஷ்ண ஐயர் ஆகியோருடன் இளைஞரான ராமானுஜ ஐயங்கார் சமமாகப் பாடி சிறப்பான பெயர் பெற்றார். 24ஆவது வயதில் தியாகராஜர் ஆராதனையில் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி புகழடைந்தார்.

இவர் கச்சேரிகளில் மத்திமகால பல்லவி பாடுவதில் சிறந்த திறமை கொண்டிருந்தார். மேடைகளில் கீர்த்தனை மட்டுமல்லாமல் பதம், ஜாவளி, தில்லானா, தமிழ்ப் பாசுரங்கள், விருத்தங்கள், ராகமாலிகை எனப் பல வகைகளில் பாடுவார். அருணாசலக் கவிராயருடைய ராமநாடகக் கீர்த்தனங்கள் பலவற்றிற்கு இசை அமைத்து, பாடிப் புகழ் பெறச் செய்தார். திருப்பாவைப் பாசுரங்களையும் ராகங்களில் அமைத்து பிரபலப் படுத்தினார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்