under review

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்: Difference between revisions

From Tamil Wiki
(Moved categories to bottom of article)
(Corrected text format issues)
Line 4: Line 4:
== இளமை, கல்வி ==
== இளமை, கல்வி ==
ராமானுஜ ஐயங்கார் காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்னும் ஊரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார்.
ராமானுஜ ஐயங்கார் காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்னும் ஊரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார்.
இவருடைய தந்தையும் இசையறிவு மிக்கவர். ராமானுஜ ஐயங்காருக்கு உடன்பிறந்த இரு சகோதரர்கள் இருந்தனர். ராமானுஜ ஐயங்கார் புதுக்கோட்டை மலையப்ப ஐயரிடம் 3 ஆண்டு குருகுலமுறையில் இசைப் பயிற்சி பெற்றார். 18-வது வயதில் நரசிம்ம ஐயங்கார் என்பவரிடம் 5 ஆண்டுகள் குருகுலமுறையில் பல ராகங்களில் பாடும் பயிற்சி பெற்றார். பின்னர் [[பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்|பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரிடம்]] மாணவராக இருந்திருக்கிறார்.

== இசைப்பணி ==
== இசைப்பணி ==
[[File:Ariyakudi 39 1.jpg|alt=ஸங்கீதத்தின் பெருமை|thumb|ஸங்கீதத்தின் பெருமை - நன்றி: பசுபதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/2012_12_01_archive.html http://s-pasupathy.blogspot.com/2012_12_01_archive.html]</ref>]]

கண்டனூர் என்னும் ஊரில் ஒரு திருமணத்தில் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரோடு சேர்ந்து அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் பாட ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கு கச்சேரிக்காக வந்திருந்த திருக்கோடிக்காவல் அழகுநம்பியாபிள்ளை, புதுக்கோட்டை மலையப்ப ஐயர், [[கனம் கிருஷ்ண ஐயர்]] ஆகிய இசைமேதைகளுடன் இளைஞரான ராமானுஜ ஐயங்கார் இணையாகப் பாடி சிறப்பான பெயர் பெற்றார். 24-வது வயதில் தியாகராஜர் ஆராதனையில் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி புகழடைந்தார்.

இவர் கச்சேரிகளில் மத்திமகால பல்லவி பாடுவதில் சிறந்த திறமை கொண்டிருந்தார். மேடைகளில் கீர்த்தனை மட்டுமல்லாமல் பதம், ஜாவளி, தில்லானா, தமிழ்ப் பாசுரங்கள், விருத்தங்கள், ராகமாலிகை எனப் பல வகைகளில் பாடுவார். அருணாசலக் கவிராயருடைய ராமநாடகக் கீர்த்தனங்கள் பலவற்றிற்கு இசை அமைத்து, பாடிப் புகழ் பெறச் செய்தார். திருப்பாவைப் பாசுரங்களையும் ராகங்களில் அமைத்து பிரபலப் படுத்தினார்.  

1938-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்<ref>[https://s-pasupathy.blogspot.in/2012_12_01_archive.html சங்கீத சங்கதிகள் - 6]</ref>.  

== விருதுகள் ==
== விருதுகள் ==
Line 30: Line 27:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references/>
<references/>
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:இசைக்கலைஞர்கள்]]
[[Category:இசைக்கலைஞர்கள்]]

Revision as of 14:35, 3 July 2023

To read the article in English: Ariyakudi Ramanuja Iyengar. ‎

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - புகைப்படம் நன்றி The Hindu
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - புகைப்படம் நன்றி The Hindu[1]

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890 - ஜனவரி 23, 1967) மிகவும் புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகர். ராகங்களைப் பாடுவதிலும் கற்பனைவளத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர்.

இளமை, கல்வி

ராமானுஜ ஐயங்கார் காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்னும் ஊரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையும் இசையறிவு மிக்கவர். ராமானுஜ ஐயங்காருக்கு உடன்பிறந்த இரு சகோதரர்கள் இருந்தனர். ராமானுஜ ஐயங்கார் புதுக்கோட்டை மலையப்ப ஐயரிடம் 3 ஆண்டு குருகுலமுறையில் இசைப் பயிற்சி பெற்றார். 18-வது வயதில் நரசிம்ம ஐயங்கார் என்பவரிடம் 5 ஆண்டுகள் குருகுலமுறையில் பல ராகங்களில் பாடும் பயிற்சி பெற்றார். பின்னர் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரிடம் மாணவராக இருந்திருக்கிறார்.

இசைப்பணி

ஸங்கீதத்தின் பெருமை
ஸங்கீதத்தின் பெருமை - நன்றி: பசுபதிவுகள்[2]

கண்டனூர் என்னும் ஊரில் ஒரு திருமணத்தில் பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரோடு சேர்ந்து அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் பாட ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கு கச்சேரிக்காக வந்திருந்த திருக்கோடிக்காவல் அழகுநம்பியாபிள்ளை, புதுக்கோட்டை மலையப்ப ஐயர், கனம் கிருஷ்ண ஐயர் ஆகிய இசைமேதைகளுடன் இளைஞரான ராமானுஜ ஐயங்கார் இணையாகப் பாடி சிறப்பான பெயர் பெற்றார். 24-வது வயதில் தியாகராஜர் ஆராதனையில் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி புகழடைந்தார். இவர் கச்சேரிகளில் மத்திமகால பல்லவி பாடுவதில் சிறந்த திறமை கொண்டிருந்தார். மேடைகளில் கீர்த்தனை மட்டுமல்லாமல் பதம், ஜாவளி, தில்லானா, தமிழ்ப் பாசுரங்கள், விருத்தங்கள், ராகமாலிகை எனப் பல வகைகளில் பாடுவார். அருணாசலக் கவிராயருடைய ராமநாடகக் கீர்த்தனங்கள் பலவற்றிற்கு இசை அமைத்து, பாடிப் புகழ் பெறச் செய்தார். திருப்பாவைப் பாசுரங்களையும் ராகங்களில் அமைத்து பிரபலப் படுத்தினார். 1938-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்[3].

விருதுகள்

  • சங்கீத ரத்னாகர விருது, 1936 வேலூர் சங்கீத சபா[4]
  • சங்கீத கலாநிதி விருது, 1938. வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை.[5]
  • சங்கீத கலாசிகாமணி விருது, 1938 & 1951. வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[6]
  • சங்கீத நாடக அகாதமி விருது, 1952[7]
  • பத்ம பூசன், 1958
  • இசைப்பேரறிஞர் விருது, 1960. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[8]

மறைவு

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஜனவரி 23, 1967 அன்று மரணம் அடைந்தார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page