under review

அய்யாக்கண்ணு புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 5: Line 5:
அய்யாக்கண்ணு புலவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம் இச்சிபுத்தூர் கிராமத்தில் நாராயணசாமி – அலர்மேல் நங்கை இணையருக்கு அக்டோபர் 8,1875-ல் பிறந்தார். இச்சிபுத்தூரில் வித்துவானாக இருந்த விஜயப்ப (ரெட்டியார்) அவர்களிடம் கல்வி பயின்றார்

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
இளமையில் அரக்கோணம் அருகே சிலமந்தை என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். மே 24,1900- அன்று கோலார் வந்து தங்கச் சுரங்க ஒப்பந்தக்காரர்களிடம் எழுத்தர் மற்றும் கணக்கர் பணியை மேற்கொண்டார். 1912-ஆம் ஆண்டில் பெங்களூர் சூசையப்பர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.தொ. சபாபதி நாவலரிடம் கல்வியியல் முறையில் பயின்று புலவர் பட்டம் பெர்றார்.  
இளமையில் அரக்கோணம் அருகே சிலமந்தை என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். மே 24,1900- அன்று கோலார் வந்து தங்கச் சுரங்க ஒப்பந்தக்காரர்களிடம் எழுத்தர் மற்றும் கணக்கர் பணியை மேற்கொண்டார். 1912-ம் ஆண்டில் பெங்களூர் சூசையப்பர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.தொ. சபாபதி நாவலரிடம் கல்வியியல் முறையில் பயின்று புலவர் பட்டம் பெர்றார்.  

அய்யாக்கண்ணு புலவரின் மனைவி அம்மாயி அம்மாள்.  
அய்யாக்கண்ணு புலவரின் மனைவி அம்மாயி அம்மாள்.  

Latest revision as of 07:22, 24 February 2024

To read the article in English: Ayyakannu Pulavar. ‎

அய்யாக்கண்ணு புலவர்

அய்யாக்கண்ணு புலவர் ( அக்டோபர் 8,1875- செப்டெம்பர் 26,1955) இ.நா.அய்யாக்கண்ணு புலவர். தமிழ் பௌத்த அறிஞர், தலித் சிந்தனையாளர்

பிறப்பு, கல்வி

அய்யாக்கண்ணு புலவர் அன்றைய வடஆர்க்காடு மாவட்டத்தில் அரக்கோணம் வட்டம் இச்சிபுத்தூர் கிராமத்தில் நாராயணசாமி – அலர்மேல் நங்கை இணையருக்கு அக்டோபர் 8,1875-ல் பிறந்தார். இச்சிபுத்தூரில் வித்துவானாக இருந்த விஜயப்ப (ரெட்டியார்) அவர்களிடம் கல்வி பயின்றார்

தனிவாழ்க்கை

இளமையில் அரக்கோணம் அருகே சிலமந்தை என்னும் ஊரில் ஆசிரியராகப் பணியாற்றினார். மே 24,1900- அன்று கோலார் வந்து தங்கச் சுரங்க ஒப்பந்தக்காரர்களிடம் எழுத்தர் மற்றும் கணக்கர் பணியை மேற்கொண்டார். 1912-ம் ஆண்டில் பெங்களூர் சூசையப்பர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் கி.தொ. சபாபதி நாவலரிடம் கல்வியியல் முறையில் பயின்று புலவர் பட்டம் பெர்றார்.

அய்யாக்கண்ணு புலவரின் மனைவி அம்மாயி அம்மாள்.

பௌத்தப்பணிகள்

பௌத்த அறிஞர் எம். ராகவன் சொற்களால் ஈர்க்கப்பட்டு மனைவி அம்மாயி அம்மாளுடன் இணை சேர்ந்து ஐரிஷ் புத்த பிக்கு யு. விசுத்தா அவர்களிடம் பஞ்சசீல உபதேசம் பெற்று பௌத்தரானார். நவம்பர் 18, 1907- அன்று தங்க வயல் மாரிக்குப்பம் பவுத்த சங்கத் தலைவர் எம்.ஒய். முருகேசம் நிறுவிய கவுதமா பவுத்தப் பள்ளியில் தமிழாசிரியராக பணியமர்ந்தார்.

எம்.ராகவன், எம்.ஒய். முருகேசம், சி. குருசாமி, ஏ.பி.பெரியசாமி புலவர், ஜி.அப்பாத்துரை ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தமிழன் இதழை அயோத்திதாச பண்டிதருக்கு பின்னர் தொடர்ந்து நடத்த ஜி.அப்பாத்துரைக்கு உதவினார். 1930 முதல் 1932 வரை தமிழனுக்கு ஆசிரியராக இருந்தார். சாக்கிய சங்கத்தை தொடர்ந்து நடத்துவதிலும் பங்கேற்றார்

1920 -இல் நேட்டால் டர்பன் பவுத்த சங்கம் தோன்றுவதற்கு, அயோத்திதாசரின் மகன் ராஜாராம் அவர்களுக்கு ஆதாரபலமாக விளங்கினார். ஏ.பி. பெரியசாமிப் புலவரை நேட்டாலுக்கு அனுப்பி வைத்து, அவர் தலைமையில் பவுத்த சங்க விழா நடக்க தம் உறவினர்களைக் கொண்டு ஏற்பாடு செய்தார்.

குறள் ஆய்வு

இ.நா. அய்யாக்கண்ணு, திருவள்ளுவரின் கொள்கைகள் முற்றாக பவுத்த மார்க்கக் கொள்கைகளே என்றும், திருக்குறள் ஒரு சார்பு நூல் என்றும், திரிப்பிடகம் அதன் மூலநூல் என்றும் கூறினார். திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் வரும் பத்துப் பாடல்களிலும் கடவுள் என்ற சொல்லே இல்லை. மீதமுள்ள 1320- பாடல்களிலும் கடவுள் என்ற சொல் எங்கும் காணப்படவில்லை. 132- அதிகாரத்திலுள்ள பேசுபொருட்களை வைத்தே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பு அமையப் பெற்றுள்ளது. ஆனால், கடவுள் என்ற சொல்லே இல்லாத முதல் அதிகாரத்திற்கு 'கடவுள் வாழ்த்து’ என்ற பொருந்தா தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தலைவர் வணக்கம் என்பதே பொருத்தமானதாகும் என்றார்

இறைவாழ்த்தைக் கூறுவதாகக் காட்டப்படும் திருக்குறள் பக்தி வழியினை போதிக்கவில்லை. அரசு முறைமையினை ஆராய்ந்த திருவள்ளுவர் அரசனையும் போற்றிப் பாடவில்லை. மனிதரே அவர் யாத்த குறளின் நாயகர். 'இறை’ என்ற சொல் கடவுளை உணர்த்துகிறது எனப் பொருள் கொள்வதைவிட, தலைவரை உணர்த்துகிறது எனக்கொண்டு, மனிதருக்கு நாயகர் என்று எண்ணப்படுவதே பொருத்தப்பாடாகும் என்றார். ஆகவே, திருவள்ளுவர், மக்களினத்தின் தலைவரை (புத்தரை) ஆதிபகவன் வாலறிவன், மலர் மிசை ஏகினான், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் எண்குணத்தான் எனும் சொற்றொடர்களால் நம் மனக்கண் முன்நிறுத்திக் காட்டுகிறார் என்று கூறினார்.

பௌத்த ஆராய்ச்சி

அய்யாக்கண்ணு புலவர் 1912- இல் புத்தரின் வாழ்க்கையை கவிதையாக எழுதினார். இந்நூலின் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வைசாக பவுர்ணமி தினத்தன்று திருச்சி, சென்னை, கோவை வானொலி நிலையத்தினர் இசை அமைத்து ஒலிபரப்பினர். 'பகவத்தியான சோடச மாலிகா’, 'பகவத் கோத்திர பண்மணிமாலை’, 'திருப்பாசுரக் கொத்து’, 'புத்த சரித்திரப்பா’ (உரைநடை) போன்ற நூல்களை எழுதினார்.

கல்விப்பணிகள்

மாணவர்களுக்காக கர்நாடக வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதினார். இந்நூலுக்கு தமிழறிஞர் கா. நமச்சிவாய முதலியார் அணிந்துரை வழங்கியுள்ளார். மதுரகவி நா.பா. ராமானுசம், புரட்சிப்பாவலர் கே.ஜி. துரைராசன், கவிஞர் வி.மு. கணேசன் போன்றவர்கள் அய்யாக்கண்ணு புலவரின் புகழ்பெற்ற மாணவர்கள்.

இசைத்துறை

அய்யாக்கண்ணு புலவர் இசைப்பாடல்களை எழுதினார். அவர் முயற்சியால் பவுத்த இசை சபா நிறுவப்பட்டது. அதில் ஓ.எம். பாபு, எம்.பி. நயினார்பாளையம் ஆகியோர் பிரபல பாடகர்களாக விளங்கினர்

விருதுகள்

மைசூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீகிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் போது சமஸ்தான ஆஸ்தான புலவராக அங்கீகரிக்கப்பட்டார்.

மறைவு

.செப்டெம்பர் 26,1955 அன்று தன் 80 -ஆவது வயதில் மறைந்தார்

நூல்கள்

  • பகவத்தியான சோடச மாலிகா
  • 'பகவத் கோத்திர பண்மணிமாலை
  • திருப்பாசுரக் கொத்து
  • புத்த சரித்திரப்பா (உரைநடை)

உசாத்துணை

✅Finalised Page