being created

அம்புலிமாமா

From Tamil Wiki
Revision as of 23:39, 9 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அம்புலிமாமா, ஆகஸ்ட் 1948 இதழ்

சிறார்களிடையே பக்தி, நல்லொழுக்கம் இவற்றைப் போதிப்பதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் அம்புலிமாமா. 1947-முதலில் தெலுங்கில் வெளியான இவ்விதழ் பின்னர் அதே ஆண்டு தமிழிலும் வெளிவந்தது. இதன் வெளியீட்டாளர் பி. நாகிரெட்டி. ஆசிரியர் சக்ரபாணி. மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் முதலிய 14 மொழிகளில் இவ்விதழ் வெளியானது. 2013-ல் இதழ் நிறுத்தப்பட்டது.

பதிப்பு, வெளியீடு

அம்புலிமாமா, சிறுவர்களுக்கிடையே நல்லுணர்வை ஊட்டவும், பாரத தேசத்தின் பாரம்பரியம், பெருமை, புராணங்களின் சிறப்பு, தர்மம், ஒழுக்கம் இவைபற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சக்ரபாணி, பி. நாகிரெட்டி ஆகியோரால் ஜூலை 1947-ல் ஆரம்பிக்கப்பட்டது. தெலுங்கில்  'சந்தமாமா'. தமிழில் அம்புலிமாமா. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த இதழ், பின்னர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், குஜராத்தி, அஸ்ஸாமீஸ், ஒரியா, மராத்தி, வங்காளம் என்று 14 மொழிகளில் வெளிவந்தது . பல லட்சம் பிரதிகள் விற்பனையானது.

1998 வரை கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமாப் பதிப்பு தனி இதழாக வெளிவந்தது.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.