first review completed

அமுதநதி

From Tamil Wiki
Revision as of 08:08, 6 March 2024 by Tamizhkalai (talk | contribs)
Amuthanadhi.jpg

அமுதநதி(ஜூலை 2017) இலங்கை, வவூனியாவிலிருந்து வெளிவந்த தமிழ்க் காலாண்டிதழ். இதன் ஆசிரியர் நெலோமி.

வெளியீடு

அமுதநதி காலாண்டிதழ் வன்னியூர்க் கவிராயரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க வேண்டி, வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவையின் சார்பாக கலை இலக்கிய அம்சங்களை உள்ளடக்கிய காலாண்டிதழாக ஜூலை 2017-ல் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியர் நெலோமி. வவூனியாவின் விஜய் அச்சுப் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதழின் விலை ரூ. 100/-.

பெயர்க்காரணம்

வன்னியூர்க் கவிராயர் வெளியிட எண்ணி, கைகூடாமல் போன 'அமுதகங்கை' கவிதைத் தொகுப்பை நினவுபடுத்தும் விதமாக இவ்விதழுக்கு 'அமுதநதி' எனப் பெயரிடப்பட்டதாக முதல் இதழில் ஆசிரியர் நெலோமி குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

அமுதநதி இதழின் ஆண்டு, காலாண்டு எண்ணிக்கைகள் 'நதி', 'கிளை' என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளன. 'ஆசிரியரிடமிருந்து' என்ற ஆசிரியர் பகுதி, கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், குறுக்கழுத்து போன்றவை இடம்பெற்றன. உடல் நலம், கல்வி, மனநலம் சார்ந்த கட்டுரைகள் இடம்பெற்றன.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.