அமுதசுரபி

From Tamil Wiki
Revision as of 00:17, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரில் வெளிவந்த இதழ்தான் “அமுதசுரபி’. முதன்முதலில் வித்வான் வே. லட்சுமணன் அவர்களை ஆசிரியராகக் க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரில் வெளிவந்த இதழ்தான் “அமுதசுரபி’.

முதன்முதலில் வித்வான் வே. லட்சுமணன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “அமுதசுரபி’ தொடங்கப் பட்டது. பிரபல ஓவியர் ஆர்யா “அமுத சுரபி’க்கு முதல் அட்டைக்கு படம் போட்டு பெருமை சேர்த்தார். இரண்டு இதழ்கள் வெளிவருவதற்குள்ளேயே ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தது. “அமுதசுரபி’யிலிருந்து வித்வான் லட்சுமணன் விலகி விட்டார்.

பத்திரிகை நடத்துவது என்றால் பொருளாதார பலமும், திறமையான நிர்வாகமும் இருக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்கு எவ்வளவு பொறுப்போ அவ்வளவு பொறுப்பு நிர்வாகிக்கும் உண்டு என்ற கருத்துடைய நான் ஆசிரியர்- நிர்வாகி என்ற இரண்டு பொறுப்புகளையும் ஒருசேர ஏற்றுக் கொண்டேன்.”

பாரதிதாசன், பெ.நா. அப்புசாமி, சுந்தானந்த பாரதி, நாடோடி, கி.ஆ.பெ. விசுவநாதம், மா. இராஜமாணிக்கனார், பி.ஸ்ரீ, ஆச்சார்யா, ம.பொ.சி., வையாபுரிப் பிள்ளை, லா.ச. ராமாமிர்தம், தி. ஜானகி ராமன், தமிழ்வாணன், பூவை. எஸ். ஆறுமுகம், வல்லிக் கண்ணன், துமிலன், த.நா. குமாரசுவாமி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, விந்தன், ஜெயகாந்தன், தேவபாரதி, ராஸ்ரீ தேசிகன், சுகி. சுப்ரமணியன், மீ.ப. சோமு, சாண்டில்யன், மாயாவி, அகிலன், ரா.பி. சேதுப் பிள்ளை, மு.வ., க.நா. சுப்ரமணியம், அ.மு. பரம சிவானந்தம், கம்பதாசன், சுரதா, எல்லார்வி, நாரண துரைக்கண்ணன், கோவி. மணிசேகரன், லட்சுமி, வசுமதி ராமசாமி என பட்டியல் நீளும்.”