அமுதசுரபி

From Tamil Wiki
Revision as of 00:31, 2 March 2022 by Jeyamohan (talk | contribs)
அமுதசுரபி 1948 நான்காவது இதழ்

அமுதசுரபி (1948) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். பழைய இலக்கியம் மற்றும் பொதுவாசிப்புக்குரிய படைப்புகள் ஆகியவற்றை கலந்து அளிக்கிறது. எழுத்தாளர் விக்ரமன் 54 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். 1976 முதல் ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது

வரலாறு

1948-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வித்வான் வே.லக்ஷ்மணன் ஆசிரியராகவும் டி.கே.சாமி வெளியீட்டாளராகவும் அமுதசுரபி வெளிவந்தது. இதழுக்கு அமுதசுரபி என்ற பெயரை தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை சூட்டினார் பிரபல ஓவியர் ஆர்யா முதல் அட்டைக்கு படம் வரைந்தார். இரண்டு இதழ்கள் வருவதற்குள் தொடர்ந்து நடத்த முடியாமல் வித்வான் லட்சுமணன் விலகி விட்டார். விக்ரமன் அவ்விதழின் பொறுப்பை ஏற்று ஆசிரியர்- நிர்வாகி என்ற இரண்டு பணிகளையும் ஆற்றினார்.

1976ல் ஸ்ரீராம் குழுமம் அமுதசுரபி இதழின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 2003 வரை விக்ரமன் ஆசிரியராக இருந்தார். அண்ணாகண்ணன் 2003 ஜூலை இறுதியில் ஆசிரியர் பொறுப்பினை 8.9.2005 வரை நடத்திவந்தார். பின்னர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் இதன் ஆசிரியராக பணியேற்றுள்ளார். பதிப்பாளர். ஏ.வி.எஸ். ராஜா.

அமுதசுரபி 2021

உள்ளடக்கம்

பாரதிதாசன், பெ.நா. அப்புசாமி, சுந்தானந்த பாரதி, நாடோடி, கி.ஆ.பெ. விசுவநாதம், மா. இராஜமாணிக்கனார், பி.ஸ்ரீ, ஆச்சார்யா, ம.பொ.சி., வையாபுரிப் பிள்ளை, லா.ச. ராமாமிர்தம், தி. ஜானகி ராமன், தமிழ்வாணன், பூவை. எஸ். ஆறுமுகம், வல்லிக் கண்ணன், துமிலன், த.நா. குமாரசுவாமி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, விந்தன், ஜெயகாந்தன், தேவபாரதி, ராஸ்ரீ தேசிகன், சுகி. சுப்ரமணியன், மீ.ப. சோமு, சாண்டில்யன், மாயாவி, அகிலன், ரா.பி. சேதுப் பிள்ளை, மு.வ., க.நா. சுப்ரமணியம், அ.மு. பரம சிவானந்தம், கம்பதாசன், சுரதா, எல்லார்வி, நாரண துரைக்கண்ணன், கோவி. மணிசேகரன், லட்சுமி, வசுமதி ராமசாமி என பல ஆசிரியர்கள் அமுதசுரபியில் எழுதியிருக்கிறார்கள்.

போட்டிகள்

உசாத்துணை

https://www.thamizham.net/ithazh/oldmag/om/om056-u8.htm