அப்துல் காதிர்

From Tamil Wiki

அப்துல் காதிர் (பொயு. 1866-1918) ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். அந்தாதி, பதிகம், குறவஞ்சி, பிள்ளைத்தமிழ் ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

பிறப்பு, கல்வி

அப்துல் காதிர் இலங்கை மலைநாட்டைச் சேர்ந்த கண்டிக்கு அண்மையிலுள்ள வீரபுரி எனப்படும் தெல்தோட்டைனயைச் சார்ந்த போப்பிட்டியில் ஆ.பி. அல்லா பிச்சை ராவுத்தர், ஹவ்வா உம்மா இணையருக்கு மகனாக 1866இல் பிறந்தார். கண்டியிலுள்ள இராணி கல்லூரியில் (தற்போது திரினிற்றிக் கல்லூரி) தமிமிழும் ஆங்கிலமும் பயின்றார். தென்னிந்தியாவுக்குச் சென்று, திருப் பத்தூர்த் தமிழ் வித்தியாசாலைத் தலைமைமயாசிரியராக இருந்த வித்துவசிரோமணி, மகமூது முடிமுத்துபாவாப் புலவரிடம் தமிழ் இலக்கண விலக்கியங்களை முறையாகக் கற்றார்.

தனிவாழ்க்கை

அப்துல் காதிர் போப்பிட்டியில் திண்ணைப்பள்ளி ஒன்றினை நிறுவி நடத்தி வந்தார். உடுதெனியா, பட்டியகாமம் ஆகிய இடப்பகுதிகளில் செய்கு சுலைமானுல் காதிரியவர்களுடன் சேர்ந்து சமூகசேவை புரிந்து, பல பள்ளிவாயில்களையும் நிறுவுவதற்குத் துணை புரிந்தார்.

தொன்மம்

அப்துல் காதிர் தனது பதினேராவது வயதில் அருட் காட்சி கிடைத்தபின், தாமாகவே பாக்கவிகள் இயற்றும் வன்மை பெற்றார். பக்திப் பாடல்கள் பாடிப் தீராதிருந்த பிணிகளைப் போக்கினர் எனவும் நம்பப்படுகின்றது.

இலக்கிய வாழ்க்கை

அப்துல் காதிர் பதினெரு வயதிலிருந்து பாடல்களை இயற்றினர்.

பட்டங்கள்

  • பதினறு வயதில் கவியரங்குகளில் கலந்து "யாழ்ப்பாண சங்கன்", "மெய்ஞ்ஞான அருள் வாக்கி’ என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றார்.
  • யாழ்ப்பாணத்திலே சீருப்புராணம், இராமாயணம் ஆகியவை பற்றி அப்துல் காதிர் ஆற்றிய விரிவுரைகளுக்காக அசனுலெப்பைப் புலவரின் தலைமையில், இவருக்கு "வித்துவ தீபம்" பட்டத்தினை 1912-ல் வழங்கினர்.

மறைவு

தமது ஐம்பத்திரண்டாவது வயதில்,1918ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 18ஆம் தேதி கண்டியிலுள்ள தமது இல்லத்தில் இவ்வுலக வாழ்வினை நீத்த்ார்கள்.

நூல் பட்டியல்

  • கண்டிக் கலம்பகம்
  • கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி
  • கண்டிநகர்ப் பதிகம்
  • சலவாத்துப் பதிகம்
  • தோவாரப் பதிகம்
  • பதாயிகுப் பதிகம்
  • பிரான்மலைப் பதிகம்
  • திருபகுதாதந்தாதி
  • மெய்ஞ்ஞானக் குறவஞ்சி
  • மெய்ஞ்ஞானக் கோவை
  • கோட்டாற்றுப் புராணம்
  • உமரொலியுல்லா பிள்ளைத் தமிழ்
  • காரணப் பிள்ளைத்தமிழ்
  • சித்திரக் கவிப்புஞ்சம்
  • பிரபந்த புஞ்சம்
  • ஆரிபுமாலை
  • பேரின்ப ரஞ்சிதமாலை
  • ஞானப் பிரகாச மாலை
  • புதுமொழிமாலை
  • திருமதீனத்துமாலை
  • வினுேத பதமஞ்சரி
  • நவமணித் தீபம்
  • சந்தத் திருப்புகழ்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

இணைப்புகள்