அன்னலட்சுமி இராஜதுரை

From Tamil Wiki
Revision as of 18:29, 17 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "அன்னலட்சுமி இராஜதுரை() எழுத்தாளர், பத்திரிகையாளர். == வாழ்க்கைக் குறிப்பு == அன்னலட்சுமி, இராசதுரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட. கல்வியங்காடு செங்குந்தா இந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அன்னலட்சுமி இராஜதுரை() எழுத்தாளர், பத்திரிகையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அன்னலட்சுமி, இராசதுரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட. கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரியிலும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் கல்விகற்றார்.

இதழியல்

'யாழ் நங்கை' என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கிய இவர், 1962 ஆம் ஆண்டு வீரகேசரியில் உதவி ஆசிரியராக இணைந்து செய்திகளோடு 'மாணவர் கேசரி' பக்கத்துக்கும் பங்களித்தாட். 1966 இல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்னும் குடும்ப வார இதழின் பொறுப்பாசிரியராகவும் 1969 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி நாளிதழின் கட்டுரைப் பகுதிக்குப் பொறுப்பாகவும் 1973 முதல் 1984 மித்திரன் வார மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். 2010 முதல் கலைக்கேசரி மாத இதழ் ஆசிரியராக உள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

அன்னலட்சுமி இராஜதுரை கவிதைகள், சிறுகதைகள், நாவல், குறுநாவல், கட்டுரைகள் என அனைத்து வடிவத்திலும் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • அன்னலட்சுமி இராஜதுரையின் பத்திரிகைப் பணியைப் பாராட்டி இந்து கலாச்சார அமைச்சு 1992இல் 'தமிழ்மணி' விருது வழங்கியது.
  • எட்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 இல் பெற்றார்.

நூல்கள்

கவிதை
  • இருபக்கங்கள்
நாவல்
  • உள்ளத்தின் கதவுகள்
குறுநாவல்
  • விழிச்சுடர்
சிறுகதைகள்
  • நெருப்பு வெளிச்சம்
பிற
  • நினைவுப் பெருவெளி

உசாத்துணை

  • ஆளுமை:அன்னலட்சுமி, இராசதுரை: noolaham

இணைப்புகள்