under review

அனுசூயா பிறைற்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D அனுசூயா பிறைற்: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B1%E0%AF%8D அனுசூயா பிறைற்: noolaham]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:11, 28 December 2023

அனுசூயா பிறைற் (பிறப்பு: ஜூன் 18, 1951) ஈழத்து இசைக்கலைஞர், இசை பயிற்றுனர். வீணை இசை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அனுசூயா பிறைற் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணாமலை, முத்துரெட்ணம் இணையருக்கு ஜூன் 18, 1951-ல் பிறந்தார். ஆரம்ப இடைநிலை உயர்க் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றார். பதுளையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய பிறைற்றை திருமணம் செய்தார். இரு மகள்கள்.

இசை வாழ்க்கை

அனுசூயா பிறைற் யாழ்ப்பாணத்தில் இசை நடனக் கல்லூரியில் கல்யாண கிருஷ்ண பாகவதர், கனகசுந்தரம் ஐயர், யோகநாயகி தணிகாசலம் ஆகியோரிடம் இசை பயின்றார். வீணை இசையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் 1998-ஆம் ஆண்டு வீணை ஆசிரியராகக் கடமையாற்றினார். சில காலங்களின் பின் இக்கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த போது மேற்படிப்பை மேற்கொள்ள வேண்டி மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் வீணை இசையை கற்று இசைமாணி பட்டத்தை பெற்றார். மீண்டும் சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் வீணை விரிவுரையாளராக இணைந்து பணியாற்றினார். வீணை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். நாட்டிய நிகழ்வுகள், நாட்டிய நாடகங்களில் பக்க வாத்தியமாக வீணை வாசித்தார். இசை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். ஓய்வு பெற்ற பின்னர் சுவாமி விலானந்தா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராக இருந்தார்.

விருது

  • தேனக கலைச்சுடர் விருது - மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை

உசாத்துணை


✅Finalised Page