அதியமான் பெருவழி

From Tamil Wiki
Revision as of 07:34, 13 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களின் சிற்றரசர்களாக இருந்த அதியமான்களுள் ஒருவரால் இப்பெருவழி உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் உருவ அமைதி பன்னிரெண்டா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களின் சிற்றரசர்களாக இருந்த அதியமான்களுள் ஒருவரால் இப்பெருவழி உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் உருவ அமைதி பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள காத அளவை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பொ. இராஜேந்திரன், சொ. சாந்தலிங்கம் தாவளம் என்று கல்வெட்டில் வரும் ஊர் 194 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது என்றும், எனவே அதியமான் பெருவழி தருமபுரி பகுதியில் பெரிய பெருவழியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.