அதியமான் பெருவழி

From Tamil Wiki
Revision as of 07:36, 13 September 2022 by Jeyamohan (talk | contribs)

அதியமான் (பொயு 12 ஆம் நூற்றாண்டு) பெருவழி: தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை என்னும் ஊரில் இருந்து நாவற்தாவளம் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் அதியமான் பெருவழி என்னும் குறிப்புடன் கூடிய கல்வெட்டு கிடைத்துள்ளது. இங்கே இருந்த பழைய பாதை அதியமான் பெருவழி என அழைக்கப்பட்டது என ஆய்வாளர் ஊகிக்கின்றனர். இந்த அதியமான் மரபினர் சோழர்காலச் சிற்றரசர்களாக இருந்திருக்கலாம்

பிற்காலச் சோழர் காலத்தில் அவர்களின் சிற்றரசர்களாக இருந்த அதியமான்களுள் ஒருவரால் இப்பெருவழி உருவாக்கப்பட்டிருக்கலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் உருவ அமைதி பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள காத அளவை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பொ. இராஜேந்திரன், சொ. சாந்தலிங்கம் தாவளம் என்று கல்வெட்டில் வரும் ஊர் 194 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது என்றும், எனவே அதியமான் பெருவழி தருமபுரி பகுதியில் பெரிய பெருவழியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.