standardised

அண்ணாமலை ரெட்டியார்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
Line 2: Line 2:

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
திருநெல்வேலி, கரிவலம்வந்தநல்லூருக்கு அருகே (தற்போதைய தென்காசி மாவட்டம்) சென்னிகுளத்தில் 1861ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியாருக்கும், ஓவு அம்மாளுக்கும் அண்ணாமலை ரெட்டியார் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். பத்து வயதுக்குப் பிறகு உழவுத்தொழில் கற்று, வறுமையின் காரணமாக வேலை செய்து வந்தார். சென்னிகுளம் மடத்திற்கு வந்த சுந்தர அடிகளிடமிருந்து தமிழ் நூல்கள், இலக்கணங்கள் கற்றார். சூடாமணி நிகண்டு, நளவெண்பா, நைடதம், பாரதம், திருக்குறள் நூல்களைக் கற்றார். முகவூரில் இலக்கணத்தில் சிறந்த கந்தசாமிக் கவிராயர், ராமசாமிக் கவிராயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்க சுந்தர அடிகள் ஏற்பாடு செய்தார். ஊற்றுமலை நிலக்கிழார் மருதப்பத்தேவர் அண்ணாமலையாரின் செய்யுள் திறமையை அங்கீகரித்து ஊற்றுமலை அவைக்களப்புலவராக நியமித்தார்.
திருநெல்வேலி, கரிவலம்வந்தநல்லூருக்கு அருகே (தற்போதைய தென்காசி மாவட்டம்) சென்னிகுளத்தில் 1861-ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியாருக்கும், ஓவு அம்மாளுக்கும் அண்ணாமலை ரெட்டியார் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். பத்து வயதுக்குப் பிறகு உழவுத்தொழில் கற்று, வறுமையின் காரணமாக வேலை செய்து வந்தார். சென்னிகுளம் மடத்திற்கு வந்த சுந்தர அடிகளிடமிருந்து தமிழ் நூல்கள், இலக்கணங்கள் கற்றார். சூடாமணி நிகண்டு, நளவெண்பா, நைடதம், பாரதம், திருக்குறள் நூல்களைக் கற்றார். முகவூரில் இலக்கணத்தில் சிறந்த கந்தசாமிக் கவிராயர், ராமசாமிக் கவிராயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்க சுந்தர அடிகள் ஏற்பாடு செய்தார். ஊற்றுமலை நிலக்கிழார் மருதப்பத்தேவர் அண்ணாமலையாரின் செய்யுள் திறமையை அங்கீகரித்து ஊற்றுமலை அவைக்களப்புலவராக நியமித்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
Line 51: Line 51:

== மறைவு ==
== மறைவு ==
தன் இருபத்தியாறாவது வயதில் சிற்றின்பங்களால் நோய்க்கு ஆளாகி தன் முப்பதாவது வயதில் 1891இல் காலமானார்.  
தன் இருபத்தியாறாவது வயதில் சிற்றின்பங்களால் நோய்க்கு ஆளாகி தன் முப்பதாவது வயதில் 1891-ல் காலமானார்.  

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 68: Line 68:
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* http://mathysblog.blogspot.com/2018/11/4.html
* http://mathysblog.blogspot.com/2018/11/4.html
 
{{Standardised}}
{{ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 17:14, 30 March 2022

அண்ணாமலை ரெட்டியார் (1865 - 1891) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். காவடிச்சிந்து நூல் முக்கியமான படைப்பு. காவடிச் சிந்தின் தந்தை, சிலேடைப் புலி என்றழைக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி, கரிவலம்வந்தநல்லூருக்கு அருகே (தற்போதைய தென்காசி மாவட்டம்) சென்னிகுளத்தில் 1861-ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியாருக்கும், ஓவு அம்மாளுக்கும் அண்ணாமலை ரெட்டியார் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றார். பத்து வயதுக்குப் பிறகு உழவுத்தொழில் கற்று, வறுமையின் காரணமாக வேலை செய்து வந்தார். சென்னிகுளம் மடத்திற்கு வந்த சுந்தர அடிகளிடமிருந்து தமிழ் நூல்கள், இலக்கணங்கள் கற்றார். சூடாமணி நிகண்டு, நளவெண்பா, நைடதம், பாரதம், திருக்குறள் நூல்களைக் கற்றார். முகவூரில் இலக்கணத்தில் சிறந்த கந்தசாமிக் கவிராயர், ராமசாமிக் கவிராயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்க சுந்தர அடிகள் ஏற்பாடு செய்தார். ஊற்றுமலை நிலக்கிழார் மருதப்பத்தேவர் அண்ணாமலையாரின் செய்யுள் திறமையை அங்கீகரித்து ஊற்றுமலை அவைக்களப்புலவராக நியமித்தார்.

இலக்கிய வாழ்க்கை

செய்யுள்கள் பல பாடியுள்ளார். யமகம், திரிபு, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைத்துப் பாடினார். சேற்றூர் மன்னரான சுந்தரதாசுத் துறையின் மேல் செய்யுள் பாடி தன் புலமையை வெளிப்படுத்தினார். கழுகுமலை முருகன் மேல் பல பாடல்கள் பாடியுள்ளார். காவடிச் சிந்து பாடல்களை முதன்முதலில் இயற்றியவர். ஊற்றுமலை நிலக்கிழார் மருதப்பத்தேவர் மீது யமகம், திரிபு, மடக்கு, சிலேடை முதலிய சொல்லணிகள் பாடினார். அண்ணாமலையாரும், பல புலவர்களும் இணைந்து ஊற்றுமலை நிலக்கிழார் மீது பாடிய செய்யுள்களை ’ஊற்றுமலை தனிப்பாடல் திரட்டு எனும் நூலாகத் தொகுத்தனர். சிற்றின்பப் பாடல்களை மிகுதியாகப் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

சமகாலப் புலவர் நண்பர்கள்
  • புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
  • செவற்குளம் கந்தசாமிப்புலவர்
  • வண்டானம் முத்துசாமி ஐயர்
  • முகவூர் கந்தசாமிக் கவிராயர்
  • இராமசாமிக் கவிராயர்
  • உ.வே.சா

பாடல் நடை

கட்டளைக் கலிப்பா

மாகக் காரிகை கும்மக வானுடன்
மருவுங் காரிகை போலெழில் வாயந்தவன்
மோகக்காரிகை மிஞ்சு மயல்கொண்டான்
மொழியுங் காரிகை மெத்தயிற் சேர்குவாய்
பாகக் காரிகையாற் செய்த காரிகை
பார்த்துப் பாடிய பாவாணர் தம்மிடி
போகக் காரிகை என்னத் தனந்தரும்
போச னேசுந் தரதாசு பூமனே

காவடிச்சிந்து

சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.

வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.

மறைவு

தன் இருபத்தியாறாவது வயதில் சிற்றின்பங்களால் நோய்க்கு ஆளாகி தன் முப்பதாவது வயதில் 1891-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • காவடிச்சிந்து
  • வீரையந்தாதி
  • வீரைத் தலபுராணம்
  • கோமதி அந்தாதி
  • வீரை நவநீத கிருட்டிணபிள்ளைத்தமிழ்
  • சங்கரநாராயணர் கோயில் திரிபந்தாதி
  • கருவை மும்மணிக்கோவை

இணைப்புகள்

உசாத்துணை

⨮ Standardised

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.