அண்டர் மகன் குறுவழுதியார்

From Tamil Wiki
Revision as of 12:13, 20 April 2022 by Ramya (talk | contribs) (Created page with "அண்டர் மகன் குறுவழுதியார் அண்டர் மகன் குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.[1] பெரும் பெயர் வழுதியின் இளவல் [2] ஆகலாம். இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அண்டர் மகன் குறுவழுதியார்

அண்டர் மகன் குறுவழுதி பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான்.[1] பெரும் பெயர் வழுதியின் இளவல் [2] ஆகலாம்.

இவரது பெயர் குறுவழுதியார் என்றும் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதியார் [3] என்றும், அண்டர் மகன் குறுவழுதி [4][5] என்றும், பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பெயர்களில் 'ஆர்' விகுதி இல்லாத பெயர்கள் இவரை பாண்டிய அரசர் எனக் கொள்ளத் தூண்டுகின்றன.[6]

பருவம் அடைந்த பெண்ணிடம் தோன்றும் அடையாளங்கள் இவை என இவர் கூறும் அடையாளங்கள் மனத்தில் கொள்ளத்தக்கவை.[7] அண்டர் என்னும் சொல் குதிரைமீது ஏறி ஆனிரை மேய்த்த இடையரைக் குறிக்கும். இவர் இடையரின் பெருங்குடி மகனாய் விளங்கியவர் என்பது இவரது பெயரால் தெரியவருகிறது.வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று. இவர் பெயரில் வரும் அண்டர் என்பது இவரை ஆயர் குல பாண்டிய அரசனாக குறிக்கிறது

அகநானூறு 150 அகநானூறு 228 குறுந்தொகை 345