அணையாவிளக்கு

From Tamil Wiki
Revision as of 22:20, 30 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அணையாவிளக்கு (1956 ) ஆர்வி எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்க்கும் படைப்பு. == எழுத்து பிரசுரம் == அணையாவிளக்கு 1955ல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அணையாவிளக்கு (1956 ) ஆர்வி எழுதிய நாவல். பொதுவாசிப்புக்குரிய நேரடியான எளிமையான காதல்கதை. சாதிக்கலப்புத் திருமணத்தை முன்வைக்க்கும் படைப்பு.

எழுத்து பிரசுரம்

அணையாவிளக்கு 1955ல் சுதேசமித்திரன் இதழில் வெளியாகியது. 1956ல் நூலாகியது. இந்நாவலுக்கு தமிழ்வளர்ச்சிக் கழக விருது 1956ல் வழங்கப்பட்டது.

கதைச்சுருக்கம்

சந்தானம் கதையின் நாயகன். அவன் வேற்றுசாதிப்பெண் ஒருத்தியை காதலிக்கிறான். அவன் அம்மா ஆசாரத்தில் ஊறியவள். அவள் இறுதியில் காதலின் மேன்மையை உணர்ந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்கிறாள். தஞ்சையின் பின்னணியில் கிராமியச் சித்தரிப்புடன் ஆர்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்

உசாத்துணை

http://s-pasupathy.blogspot.com/2016/08/blog-post_29.html