அஜிதநாதர்

From Tamil Wiki
Revision as of 19:41, 26 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "அஜிதநாதர் சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர். சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர். == வாழ்க்கை வரலாறு == இக்சவாகுகுல அயோத்தி மன்னர் ஜிதசத்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அஜிதநாதர் சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர். சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர்.

வாழ்க்கை வரலாறு

இக்சவாகுகுல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் சாகேதாவில் பிறந்தார். அவர் இறக்கும் போது அவரின் வயது 72 லட்சம் என சமணர்கள் நம்புகின்றனர். அவர் சால மரத்தின் அடியில் சிகார்ஜியில் சைத்ர சுக்ல பஞ்சமி நாளில் மோட்சம் அடைந்தார்.

வேத கால அஜிதநாதர்

யசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் பாட்டன்) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பது இந்து சமய புராண இதிகாசங்களிலும் காணப்படுகிறது.

சிற்பத்தின் பண்புகள்

  • நிறம்: பொன்னிறம்
  • வாகனம்: யானை
  • யட்சன்: மகாயட்சன்
  • யட்சினி: அஜிதா

இலக்கியங்கள்

  • ரன்னாவின் அஜித புராணம், அஜிதநாதரின் கதையை விவரிக்கிறது.
  • 7 ஆம் நூற்றாண்டில் நந்திசேனரால் தொகுக்கப்பட்ட அஜிதசாந்தி அஜிதநாதர், சாந்திநாதரின் புகழைப் பாடுகிறது.

உசாத்துணை

  • Compendium of Jainism. Dharwad: University of Karnataka (1980)