under review

அசனா லெப்பை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ்ப்பாணன் வண்ணார்பண்ணையில் 1870-ல் சுல்த்தா...")
 
Line 3: Line 3:
இலங்கை யாழ்ப்பாணன் வண்ணார்பண்ணையில் 1870-ல் சுல்த்தான் முகியித்தீனுக்கு இரண்டாவது மகனாக அசனா லெப்பை பிறந்தார். இலங்கை அரசாங்கத்தில் எழுதுவினைஞராகக் பணியாற்றினார். முதன்முதலில் முஸ்லிம் சமூகத்திலிருந்து அரசுப்பணியில் சேர்ந்தவர். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
அசனா லெப்பை திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை எழுதினார். அசளு லெப்பைப் புலவரின் பாடல்கள் ’புகழ்ப் பாவணி’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இந்நூலுக்கு இவரது நண்பர் மு. சுலைமான் லெப்பை சிறப்புப் பாயிரம் அளித்தார். இந்நூலில் நபிகள் நாயகம்(சல்) அவர்கள்மீது நவரத்தினத் திருப்புகழும், முகியித்தீன் அப்துல் காதிறு ஆண்டவர் மீது ஆசிரிய விருத்தமும், அகமதுல் கபீறுற்றியாகி ஆண்டகை மீது அந்தாதியும், சாகுல் ஹமீது ஆண்டவர் மீது முனுசாத்தும் பாடிச் சேர்க்கப்பட்டன."குதுபு நாயக அனுசாசனம்" இருநூற்று நாற்பத்து நான்கு பாடல்களைக் கொண்டது.  
அசனா லெப்பை திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை எழுதினார். அசளு லெப்பைப் புலவரின் பாடல்கள் ’புகழ்ப் பாவணி’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இந்நூலுக்கு இவரது நண்பர் மு. சுலைமான் லெப்பை சிறப்புப் பாயிரம் அளித்தார். இந்நூலில் நபிகள் நாயகம்(சல்) அவர்கள்மீது நவரத்தினத் திருப்புகழும், முகியித்தீன் அப்துல் காதிறு ஆண்டவர் மீது ஆசிரிய விருத்தமும், அகமதுல் கபீறுற்றியாகி ஆண்டகை மீது அந்தாதியும், சாகுல் ஹமீது ஆண்டவர் மீது முனுசாத்தும் பாடிச் சேர்க்கப்பட்டன."குதுபு நாயக அனுசாசனம்" இருநூற்று நாற்பத்து நான்கு பாடல்களைக் கொண்டது. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதியை 1890-ல் இயற்றினார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் புலவர்கள் பலருடன் தொடர்பு பூண்டிருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருமான [[குலாம் காதிறு நாவலர்|குலாம் காதிறு நாவலரு]]டன் நட்புப் கொண்டிருந்தார். குலாம் காதிறு நாவலர் இயற்றிய ’ஆரிபு நாயகம்’, ‘நாகூர்ப் புராணம்", "பிக்குகுமாலை', 'திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்கு சாற்றுக்கவி எழுதினார்.

== மறைவு ==
== மறைவு ==
அசனா லெப்பை 1918-ஆம் ஆண்டு காலமானார்.
அசனா லெப்பை 1918-ஆம் ஆண்டு காலமானார்.

Revision as of 17:13, 3 February 2023

அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணன் வண்ணார்பண்ணையில் 1870-ல் சுல்த்தான் முகியித்தீனுக்கு இரண்டாவது மகனாக அசனா லெப்பை பிறந்தார். இலங்கை அரசாங்கத்தில் எழுதுவினைஞராகக் பணியாற்றினார். முதன்முதலில் முஸ்லிம் சமூகத்திலிருந்து அரசுப்பணியில் சேர்ந்தவர். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அசனா லெப்பை திருப்புகழ்ப் பாவணி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம் ஆகிய நூல்களை எழுதினார். அசளு லெப்பைப் புலவரின் பாடல்கள் ’புகழ்ப் பாவணி’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இந்நூலுக்கு இவரது நண்பர் மு. சுலைமான் லெப்பை சிறப்புப் பாயிரம் அளித்தார். இந்நூலில் நபிகள் நாயகம்(சல்) அவர்கள்மீது நவரத்தினத் திருப்புகழும், முகியித்தீன் அப்துல் காதிறு ஆண்டவர் மீது ஆசிரிய விருத்தமும், அகமதுல் கபீறுற்றியாகி ஆண்டகை மீது அந்தாதியும், சாகுல் ஹமீது ஆண்டவர் மீது முனுசாத்தும் பாடிச் சேர்க்கப்பட்டன."குதுபு நாயக அனுசாசனம்" இருநூற்று நாற்பத்து நான்கு பாடல்களைக் கொண்டது. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதியை 1890-ல் இயற்றினார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் புலவர்கள் பலருடன் தொடர்பு பூண்டிருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருமான குலாம் காதிறு நாவலருடன் நட்புப் கொண்டிருந்தார். குலாம் காதிறு நாவலர் இயற்றிய ’ஆரிபு நாயகம்’, ‘நாகூர்ப் புராணம்", "பிக்குகுமாலை', 'திரிமக்கா திரிபந்தாதி ஆகிய நூல்களுக்கு சாற்றுக்கவி எழுதினார்.

மறைவு

அசனா லெப்பை 1918-ஆம் ஆண்டு காலமானார்.

நூல் பட்டியல்

  • திருப்புகழ்ப் பாவணி
  • நவரத்தினத் திருப்புகழ்
  • குதுபு நாயக அனுசாசனம்
  • திருநாகை நிரோட்டக யமகவந்தாதி
  • பகுதாதந்தாதி
  • பஞ்சமணித்திருப்புகழ்
  • சத்தரதனத் திருப்புகழ்
  • பதாயிகுப்பதிகம்
  • இருபதிச் சிலேடை

உசாத்துணை

✅Finalised Page