being created

அகிலன் எத்திராஜ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 1: Line 1:
[[File:WhatsApp Image 2022-05-30 at 7.59.10 AM.jpg|thumb|அகிலன் எத்திராஜ்]]
[[File:WhatsApp Image 2022-05-30 at 7.59.10 AM.jpg|thumb|அகிலன் எத்திராஜ்]]
பேராசிரியர் அகிலன் எத்திராஜ்
பேராசிரியர் அகிலன் எத்திராஜ்

அகிலன் எத்திராஜ் மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலப் பேராசிரியர். உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் முழுநேரமாக மொழிபெயர்ப்புப் பணியை செய்து வருகிறார்.

Line 20: Line 11:

  5.உசாத்துணை
  5.உசாத்துணை

1.பிறப்பு , கல்வி,
1.பிறப்பு , கல்வி,

ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பா பெயர் எத்திராஜ். அம்மா பெயர் மரகதம். ஈரோட்டில் பிறந்த இவர் தந்தையின் பணி காரணமாக குடும்பம் சேலத்திற்கு இடம்பெயர்ந்ததால் பள்ளிக்கல்வியைச் சேலத்தில் பயின்றார். தனது பியுசி படிப்பை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயின்றார். தனது இளங்கலை ஆங்கிலம் மற்றும் முதுகலை ஆங்கிலப் பட்டப்படிப்புகளைச் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார்.
ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.16.10.1954ல் பிறந்தார். அப்பா பெயர் எத்திராஜ். அம்மா பெயர் மரகதம். ஈரோட்டில் பிறந்த இவர் தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் சேலத்திற்கு இடம்பெயர்ந்ததால் பள்ளிக்கல்வியைச் சேலத்தில் பயின்றார். தனது பியுசி படிப்பை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயின்றார். தனது இளங்கலை ஆங்கிலம் மற்றும் முதுகலை ஆங்கிலப் பட்டப்படிப்புகளைச் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார்.

2.தனிவாழ்க்கை, பணி
2.தனிவாழ்க்கை, பணி
Line 66: Line 58:

https://ethirajakilan.blogspot.com
https://ethirajakilan.blogspot.com
{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:58, 1 June 2022

அகிலன் எத்திராஜ்

பேராசிரியர் அகிலன் எத்திராஜ்

அகிலன் எத்திராஜ் மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலப் பேராசிரியர். உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் முழுநேரமாக மொழிபெயர்ப்புப் பணியை செய்து வருகிறார்.

1.பிறப்பு,கல்வி, 
2.தனிவாழ்க்கை,பணி
3.இலக்கிய மொழிபெயர்ப்பு பணி
4.இலக்கிய இடம்
5.உசாத்துணை

1.பிறப்பு , கல்வி,

ஈரோட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.16.10.1954ல் பிறந்தார். அப்பா பெயர் எத்திராஜ். அம்மா பெயர் மரகதம். ஈரோட்டில் பிறந்த இவர் தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் சேலத்திற்கு இடம்பெயர்ந்ததால் பள்ளிக்கல்வியைச் சேலத்தில் பயின்றார். தனது பியுசி படிப்பை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பயின்றார். தனது இளங்கலை ஆங்கிலம் மற்றும் முதுகலை ஆங்கிலப் பட்டப்படிப்புகளைச் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பயின்றார்.

2.தனிவாழ்க்கை, பணி

அகிலன் எத்திராஜ் கீதா என்பவரை 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் வங்கி அதிகாரியாகப் பணியாற்றினார். தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார்.மகள் லக்ஷ்மிஞானபாலா, மகன் சுதன் விக்னேஷ் அமெரிக்காவில் பணியாற்றுகின்றார். ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் 1976ம் ஆண்டு பகுதி நேர ஆங்கிலப் பயிற்றுனராகப் பணியில் சேர்ந்த இவர் உதவிப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் ,கல்லூரி முதல்வர் எனப் பல பொறுப்புகளையும் , பதவிகளையும் வகித்து ஓய்வு பெற்றார். தற்பொழுது அமெரிக்காவில் பணியாற்றி வரும் தனது மகனோடு வசித்து வருகிறார்.

3.இலக்கிய மொழிபெயர்ப்பு பணி

•துருக்கி எழுத்தாளர் அஹ்மட் ஹம்டி தன்பினாரின் (Time Regulation Institute) 'நேர நெறிமுறை நிலையம்' எனும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அது 2015ல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

•நோபல் பரிசு பெற்ற ஐஸ்லாந்து நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின் “ (The Fish Can Sing) மீனும் பண் பாடும்” நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அது காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2017ல் வெளியிடப்பட்டது.

•சீன எழுத்தாளர் மா ஜியானின் “(Stick Out Your Tongue) நாக்கை நீட்டு” என்ற சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் இதனை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. • துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் “(The Black Book)கருப்புப் புத்தகம்” எனும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

•செக் நாட்டு எழுத்தாளர் மைக்கேல் அய்வாஸின் “(The Other City) மற்ற நகரம்” எனும் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

• இவர் மொழிபெயர்த்த ஜெர்மன் கவிஞர் குந்தர் கூனர்ட், மற்றும் சிரியா நாட்டுக் கவிஞர் அடநிஸ் ஆகியோரின் கவிதைகள் சில மீட்சி புக்ஸ் வெளியீடான “உலகக் கவிதை”எனும் தொகுப்பில், இடம்பெற்றுள்ளது.

•ஆக்டேவியா பாஸின் ”நீலப் பூச்செண்டு” எனும் சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பானது லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் (மீட்சி புக்ஸ் வெளியீடு) என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

•இவர் உதிரியாக மொழிபெயர்த்த சிலவற்றையும், உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் இவரது வலைப்பூவான https:/ethirajakilan.blogspot.in ல் எழுதி வருகிறார்.

4.இலக்கிய இடம்

” எத்திராஜ் அகிலன் நான் பெரிதும் மதிக்கும் மொழிபெயர்ப்பாளர். மிகச்சிரத்தையாக, நுட்பமாக, மூலத்திற்கு மிகவும் நெருக்கமாக மொழியாக்கம் செய்யக்கூடியவர்” என இவரைப்பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.

“சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் நம் மரபுக்கு நெருக்கமான படைப்பு ‘நாக்கை நீட்டு’. எத்திராஜ் அகிலன் வெகு நுட்பமாக மொழிபெயர்த்திருக்கிறார்” என பத்திரிகையாளரும் எழுத்தாளரும், விமர்சகருமான ஷங்கர்ராமசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.

“எத்திராஜ் அகிலன். என்னுடைய முப்பது ஆண்டுக்கால நண்பர். கவிஞர் பிரம்மராஜன் ஊட்டியில் இருந்த காலத்தில் அறிமுகமானவர். மீட்சி இதழும் மீட்சி பதிப்பகமும் செயல்பட்ட அந்தப் பொன்னான நாட்களில் அறிமுகமானவர். ஆங்கிலத் திலிருந்து உருப்படியான சில மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்” என கவிஞர் சுகுமாரன் இவரைப்பற்றி குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

https://www.sramakrishnan.com/?p=8492

http://vaalnilam.blogspot.com/2016/03/blog-post.html

https://www.hindutamil.in/news/literature/158698-.html

https://www.vikatan.com/arts/literature/padipparai-naakkai-neettu

https://www.facebook.com/akilan.ethirajan

https://ethirajakilan.blogspot.com

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.