அகரமுதல்வன்

From Tamil Wiki
Revision as of 13:18, 3 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அகரமுதல்வன் ( 1992) தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுபவர். இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்பவர். ஈழநிலத்தின் பின்னணியில் படைப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அகரமுதல்வன் ( 1992) தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுபவர். இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்பவர். ஈழநிலத்தின் பின்னணியில் படைப்புகளை உருவாக்குகிறார்.

பிறப்பு, கல்வி

அகரமுதல்வன் இலங்கையில் (ஈழம்) கிளிநொச்சி மாவட்டம் பளை என்னும் ஊரில் 11 ஆகஸ்1992ல் சுந்தரலிங்கம்- ஜெயசோதி இணையருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு. யாழ்ப்பாணம் சைவ சன்மார்க்க வித்தியாசாலை என பல ஊர்களிலாக பள்ளியிறுதி வரை படித்தார். போர்க்காலத்தில் பிறந்தமையால் இடம்பெயர்ந்தபடியே இருந்தார்.

தனிவாழ்க்கை

27 ஆகஸ்ட் 2018ல் ஜெயப்பிரபாவை மணந்தார். ஆதீரன் என ஒரு மகன். திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். முழுநேர எழுத்தாளர்

இலக்கியவாழ்க்கை

அகரமுதல்வனின் முதல் படைப்பு 2000த்தில் பிரசுரமான கவிதை.இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் அம்புலி, கவிஞர் கஸ்தூரி, எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவக்குமார், மலைமகள், மு. தளையசிங்கம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரைச் குறிப்பிடுகிறார்

விருதுகள்

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது

கோவை வாசகர் வட்ட கவிஞர் மீரா விருது

தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது

நூல்கள்

கவிதை
  • அத்தருணத்தில் பகை வீழ்த்தி
  • அறம் வெல்லும் அஞ்சற்க
  • டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
சிறுகதை
  • இரண்டாம் லெப்ரினன்ட்
  • முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
  • பான் கி மூனின் றுவாண்டா
  • மாபெரும் தாய்

குறுநாவல்

  • உலகின் மிக நீண்ட கழிவறை.
நேர்காணல்
  • நன்றேது? தீதேது?
தொகுப்பாசிரியர்
  • ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
  • துயிலாத ஊழ் – ஈழச் சமகால சிறுகதைகள்.