standardised

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்

From Tamil Wiki
Revision as of 10:03, 8 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன்

ஃப்லாரென்ஸ் ஸ்வெயின்ஸன் (புளாரென்ஸ் சுவெயின்சன்) (Miss. Flowerence Swainson) (இறப்பு - 1919) ஆங்கில மதப்பரப்புநர், கல்வியாளர். பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர்.

பிறப்பு

ஃப்ளாரென்ஸ் ஸ்வெயின்ஸன் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.ஸ்வெயின்ஸன் குடும்பம் பாரம்பரியம் மிக்க உயர்குடிகளில் ஒன்று.

கல்விப்பணி

ஸ்வெயின்ஸன் இளமையில்

ஸ்வெயின்ஸன் இங்கிலாந்தின் ஜனானா மிஷனரி சொசைட்டி (ZANANA Missionary Society) ஊழியராக இந்தியாவந்து பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஒரு பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்தார். உடல்நிலை நலிவடைய இங்கிலாந்து சென்றார். திரும்பவும் இந்தியா வந்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருக்கும் சாரா டக்கர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். ஆசிரியப்பணியோடு ஆதரவற்ற பெண்களுக்கு தையல் கற்றுக்கொண்டுக்கும் பணியையும் செய்தார். அக்காலத்தில் பெண்களுக்கான சுயதொழிலாக தையல் விளங்கியது. அவர்களுக்கு வாழ்க்கையில் விடுதலையையும் வழங்கியது. 1895ல் அவரிடம் தையல் கற்க வந்த ஓர் ஊமைப்பெண் கற்றுக்கொள்ள முயல்வதை கண்டு அவர் மேல் ஆர்வம் கொண்டார். அப்பெண் தையல் கற்று தன்னைச் சார்ந்தே வாழ்வதை கண்டு மேலும் மூன்று ஊமைப்பெண்கள் வகுப்பில் சேர்ந்தனர். அதை இறையாணை என கருதிய செல்வி ஸ்வெயின்ஸன் 1897-ல் ஒரு சிறு பள்ளியை ஆரம்பித்துப் படங்களையும் எழுத்துக்களையும் காட்டி கற்பிக்கலானார்.

மேலும் ஊமைகள் வகுப்பில் சேரவே ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து ஊமையரின் பள்ளியாக நடத்தினார். மாணவிகளின் தொகை பெருகவே பிளாரன்ஸ் ஸ்வெயின்சன் செவிடர் பாடசாலை விரிவடைந்தது.1900-ஆம் ஆண்டு 14 ஏக்கர் நிலத்தை வாங்கி பல கட்டிடங்களுடன் ஒரு முழுமையான கல்வி நிலையமாக ஆக்கினார். தனக்கு வாரிசுரிமையாக வந்த பொருள் அத்தனையையும் அதற்குச் செலவழித்தார். செல்வி மார்கன் (Miss. Morgan) ரெவெரெண்ட் சார்ல்ஸ் சிதெண்டென் (Rev. Charles Chittenden) ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். கேட்கும் திறனற்றவர்களுக்கு கற்பிக்கும் பயிற்சி பெற்றவர்களை ஆசிரியைகளாக அமர்த்தி அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மேலும் ஆசிரியைகளை உருவாக்கினார்.1901ல் அரசு அங்கீகாரம் கிடைத்தது.

மறைவு

1919-ல் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்ற சென்று தமது 94வது வயதில் காலமானார்.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.