சித்திலெப்பை மரைக்காயர்

From Tamil Wiki
Revision as of 14:07, 3 February 2023 by Ramya (talk | contribs) (Created page with "சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முதல் நாவலான அசன்பே சரித்திரம் எழுதியவர். முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் செய்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் முகம்மது காசிம். இலங்கை கண்டியில் முல்க் ரஹ்மதுல்லாவின் மகனாக ஜூன் 11, 1838இல் பிறந்தார். முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபியாவைச் சேர்ந்த முல்க் ரஹ்மதுல்லாவின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக முல்க் ரஹ்மதுல்லா கண்டியில் குடியேறினார். தந்தை வழக்கறிஞர்.

முகம்மது காசிம் சித்திலெப்பை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்றார். குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி கற்றார். ஆங்கில மொழியையும் கற்றார். அரபு, தமிழ், ஆங்கிலம் பயின்றார்.

அரசியல் வாழ்க்கை

இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று போராடினார். இதனால் 1889ஆம் ஆண்டில் இஸ்லாமியர் இருவர் நியமன உறுப்பினராக நியமனம் பெற்றனர். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை சித்தி லெப்பை வரவேற்று தன் முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு வழங்கினார்.

தனிவாழ்க்கை

கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் 1862ல-ல் வழக்கறிஞராக நியமனம் பெற்றார். 1864-ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். நொத்தாரிசாகவும் பணிபுரிந்தார். கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராக பணிபுரிந்தார்.

சமூகப் பணி

இலங்கை முஸ்லிம்களைக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்தார். பாடசாலைகளை நிறுவினார். பாடநூல்களை எழுதினார்.

எகிப்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கண்டியில் வாழ்ந்த ஒறாபி பாஷா அவரின் சமூகப் பணிகளுக்கு துணைபுரிந்தார். 1884-ல் கொழும்பு, புதிய சோனகத் தெருவில் முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை தோற்றுவித்தார். இதற்கு முதன் முதலாக ஒறாபி பாஷா நூறு ரூபாவை நன்கொடையாக வழங்கினார். இப்பாடசாலை ஏழு வருடங்களுக்கு பின்னர், ”அல்-மதரசதுல் கைரியா” என மாற்றம் பெற்றது. இது பின்னர் கொழும்பு சாஹிரா கல்லூரியாக ஆனது.

இதழாசிரியர்

முஸ்லிம் நேசன்

’முஸ்லிம் நேசன்’ என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். முதல் முஸ்லிம் பத்திரிகையாளர். ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி "முஸ்லிம் நேசன்" என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். சித்தி லெப்பை, தமது வாரப்பத்திரிகை மூலமாகத் தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டு பற்றி விளக்கினார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலியன பற்றிய அறிக்கைகள் போன்றவற்றைத் தமது பத்திரிகையில் வெளியிடத் தீர்மானித்து இருந்தார்.

ஞான தீபம்

1892-ல் ஞானதீபம் பத்திரிக்கையைத் தொடங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதினார். தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவல், ஈழத்தில் வெளிவந்த நாவல்.

மறைவு

சித்திலெப்பை மரைக்காயர் பிப்ரவரி 5, 1898-ல் காலமானார்.

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஈழத்து தமிழ் அறிஞர்கள்: கவிஞர் த. துரைசிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு