கொள்ளு நதீம்

From Tamil Wiki
கொள்ளு நதீம்

கொள்ளு நதீம் (18-09-1970 )தமிழில் இலக்கியச் செயல்பாட்டாளர், பதிப்பாளர். சீர்மை என்னும் பதிப்பகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். இஸ்லாமியப் பண்பாட்டை முன்வைக்கும் நூல்களை சீர்மை வெளியிடுகிறது

பிறப்பு கல்வி

ஆம்பூர் நகரில் 18-09-1970 ல் கொள்ளு நிசார் அஹ்மத் - சிய்யா சம்சாத் பேகம் இணையரின் மகனாக பிறந்தார். இந்து மேல்நிலைப்பள்ளி ஆம்பூரில் மேல்நிலைக்கல்வி. பட்டப்படிப்பை இடைநிறுத்தம் செய்ததால் தொடர்ந்து தொலைதூரக் கல்வியில் பட்டபடிப்பையும், பட்ட மேற்படிப்பையும் தொடர்ந்து முடித்தார்

தனிவாழ்க்கை

கொள்ளுன்நதீம் போளூர் அஹ்மதியை 30-12-2001ல் மணந்தார்.  அப்துல்லாஹ் சவூத், முஹம்மத் அய்யன் என்னும் இரு மகன்கள் .1997-2011 வரை 14 ஆண்டுகள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பினார். 

இலக்கியப்பணி

சீர்மை என்கிற பதிப்பகம் 2020 ஆம் ஆண்டு உருவானது. தமிழிலக்கியத்திலும், முஸ்லிம் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்ட நண்பர்கள் லாப நோக்கமற்ற முறையில் தன்னார்வலர்களாக இணைந்து ஒரு கூட்டுறவு முயற்சியாக இதை தொடங்கினர். அதில் கொள்ளுநதீம் இணைந்து பணியாற்றுகிறார்.

தமிழுடன் ஆங்கிலம், உருது, அரபு என பிற மொழிகளில் வாசிக்கும் அறிவு கொண்டிருப்பதால் நூல்களைப் படித்து உரிய பிரதிகளை இனம் காணும் பணியில் உதவுகிறார்