under review

குறுங்கோழியூர் கிழார்

From Tamil Wiki
Revision as of 18:13, 12 January 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Kurunkoliyur Kilar. ‎

குறுங்கோழியூர் கிழார் சங்க காலப் புலவர். புறநானூற்றில் இவர் பாடிய மூன்று பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

சோழர்களின் பழைய தலைநகரான உறையூர் குறுங்கோழியூரில் பிறந்தார். வேளாண்மைத் தொழிலைச் செய்து வந்ததால் கிழார் என்ற பின்னொட்டு உள்ளது. இவர் பாடிய மூன்று பாட்டுடைத் தலைவர்களும் சேர அரசர்கள் என்பதால் இவர் சேர நாட்டினர் என்பர்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றில் இடம்பெறும் (17, 20, 22) மூன்று பாடல்கள் இவர் பாடியவை.

பாடப்பட்ட அரசர்கள்
  • யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
  • தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாடல் நடை

  • புறநானூறு: 17

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப்,

  • புறநானூறு: 20

இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை;
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;

  • புறநானூறு: 22

தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,

உசாத்துணை


✅Finalised Page