நெலோமி அன்ரனி குரூஸ்

From Tamil Wiki
Revision as of 10:16, 8 January 2023 by Ramya (talk | contribs) (Created page with "நெலோமி அன்ரனி குரூஸ் (நவம்பர் 22, 1971) ஈழத்து தமிழ் எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == நெலோமி அன்ரனி குரூஸ் இலங்கை மன்னாரில் சூசைநாயகம், டொலறோஸ் இணையருக்கு நவம்பர் 22, 1971-ல் பிறந்தார்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நெலோமி அன்ரனி குரூஸ் (நவம்பர் 22, 1971) ஈழத்து தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நெலோமி அன்ரனி குரூஸ் இலங்கை மன்னாரில் சூசைநாயகம், டொலறோஸ் இணையருக்கு நவம்பர் 22, 1971-ல் பிறந்தார். தந்தை நாவண்ணன் எனும் புனைப்பெயர் கொண்ட எழுத்தாளர் கவிஞர். மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்றார். வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

நெலோமி அன்ரனி குரூஸின் முதல் சிறுகதை ”எறும்பூ...” 1987-ல் வெளியானது. பாதுகாவலன், தினமுரசு ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினார். கவியரங்குகள் பலவற்றில் பங்கு பெற்றார்.

நெலோமி, அன்ரனி குரூஸ் ”அமுதநதி” என்னும் கலை இலக்கிய சமூக காலாண்டிதழை வெளியிட்டு வருகின்றார்.

விருதுகள்

  • நெலோமி அன்ரனி குரூஸின் ‘கூடிக்குதிப்போம்’ எனும் நூல் 2015-ல் வடக்கு மாகாணத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய நூற் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டது.
  • வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 2018ஆம் ஆண்டு வெங்கலச் செட்டிக்குள பிரதேச கலை இலக்கிய சேவைக்காக வெங்கல ஜோதி விருது வழங்கப்பட்டது.

நூல்கள்

  • கூடிக்குதிப்போம்

உசாத்துணை

ஆளுமை:நெலோமி, அன்ரனி குரூஸ்: noolaham