திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்

From Tamil Wiki
Revision as of 10:38, 3 January 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)

’’தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் எடுத்து அதன் வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என கோரிக்கை’’

திருவாரூர் தியாகராஜர் கோயில் கடந்த 3000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும் இந்த கோயிலின் சிறப்பாக கோயில் ஐந்து வேலி குளம் ஐந்து வேலி செங்கல் நீரோடை ஐந்து வேலி என்ற பரப்பளவில் கட்டப்பட்டது ராஜராஜ சோழனின் தாயார் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் சன்னதியை வணங்கி சென்றதாகவும் மேலும் இந்த கோவிலின் வடிவத்தைப் பார்த்து தான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதாகவும் வரலாறு உள்ளது மேலும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது என்றும் தஞ்சாவூர் பெரிய கோயில் கருங்கல் திருப்பணிகள் என்ற வரலாறும் உண்டு.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேவாசிரியன் மண்டபம் என்கிற ஆயிரங்கால் மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில்தான் தேவர்கள் சிவபூஜை செய்யும் இடமாகவும் கோயிலுக்கு வருபவர்கள் தேவாசிரியன் மண்டபத்தை வணங்கி விட்டு பின்னர் தான் கோயிலுக்குள் உள்ளே செல்வார்கள் என்பது ஐதீகம் இந்த மண்டபத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மன்னர்கள் காலத்தில் மூலிகைகளால் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த மண்டபத்தில் ஒட்டு மொத்தம் 96 ஓவியங்கள் உள்ளன குறிப்பாக தியாகராஜர் தேவலோகத்திலிருந்து தேரின் மூலமாக பூலோகம் வரும் ஓவியம் மற்றும் குதிரை வாகனம் யானை வாகனம் ரிஷப வாகனம் என தியாகராஜர் புடைசூழ வருகை தருவது போன்ற ஓவியம், வாண வேடிக்கைகள், 18 வகையான வாத்தியங்கள் உள்ளிட்ட 96 வகையான ஓவியங்கள் மூலிகைகளால் வரையப்பட்டது இந்நிலையில்

1988ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கு செய்வதற்காக திருப்பணிகள் செய்த பொழுது இந்த ஓவியங்கள் பழுதடைந்தன. பின்னர் தனிநபர் ஒருவர் தற்போதைய பெயிண்ட்களை பயன்படுத்தி பழுதடைந்த ஓவியங்களை சரி செய்ததற்கு பக்தர்களும் பொதுமக்களும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர் இந்து சமய அறநிலைத்துறை பழைய மூலிகைகளை கொண்டு ஓவியங்களை வரைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் ஓவியங்கள் வரையும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது தற்போதுவரை தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள பழங்கால ஓவியங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பழைய மூலிகைகள் கொண்டு தேவாசிரியன் மண்டபத்தில் சிதலமடைந்த ஓவியங்களை வரைய வேண்டும் அதுமட்டுமின்றி தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு ஓவியத்தையும் எடுத்து அதன் வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


உசாத்துணை:

தமிழகக்‌ கோயிற்கலை மரபு, ஆசிரியா்‌: முனைவர்‌. குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, வெளியீட்டு மேலாளர்‌ மற்றும்‌ காப்பாளர்‌: சரசுவதி மகால்‌ நூலகம்‌, தஞ்சாவூர்‌.

கலையியல் ரசனைக் கட்டு, குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, அகரம் பதிப்பகம்

திருவாரூர்‌ மாவட்டத்‌ தொல்லியல்‌ வரலாறு, ஆசிரியர்கள்‌: பெச. இராசேந்திரண்‌, வெ. வேதாசலம்‌, செ. சாந்தலிங்கம்‌, க. நெடுஞ்செழியன்‌, பொதுப்‌ பதிப்பாசிரியர்‌: கு. தரமோதரன்‌, இயக்குநர்‌, தொல்லியல்‌ துறை, வெளியீடு: தமிழ்நாடு தொல்லியல் துறை

https://tamil.abplive.com/news/thanjavur/request-to-restore-400-year-old-paintings-at-thiruvarur-thiyagaraja-swamy-temple-21961