first review completed

பிள்ளையார் கதை

From Tamil Wiki
Revision as of 21:00, 1 January 2023 by Ramya (talk | contribs)
பிள்ளையார் கதை

பிள்ளையார் கதை (பதினெட்டாம் நூற்றாண்டு) சைவ நூல். விநாயகர் நோன்பின் போது ஆலயங்களில் மரபாக பாடப்படும் கதை.

நூல் பற்றி

பிள்ளையார் கதை வரதராச பண்டிதர் இயற்றிய நூல். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக நிலையத்தால் பதிப்பிக்கப்பட்டது. விநாயகர் ஆலயங்களில் பாராயணம் செய்யும் வழக்கம் உடையது. இலங்கையிலுள்ள பிள்ளையார் கோயில்களில் ”பிள்ளையார் பெருங்கதை” என்னும் பெயரில் பாராயணம் செய்து இருபத்தொயொரு நாள் மக்கள் விரதம் இருப்பர். பாராயணம் செய்வதால் கேடு வராது என்பது மக்கள் நம்பிக்கை.

உள்ளடக்கம்

விநாயகரை நினைத்து அவர் அருள் வேண்டி நோற்கப்படும் நோன்பின் போது பிள்ளையார் புராணத்தை கோயில்களில் பாடுவது மரபு. பிள்ளையாரின் பெருமைகளும், அவரை வணங்குவதால் வரும் பயன்களும் இந்நூலில் உள்ளது. விநாயக விரதங்கள் கந்த புராணம், லிங்க புராணம், உபதேசக் காண்டம் முதலிய நூல்களில் சொல்லப்பட்ட விநாயகரின் மகிமைகளைத் திரட்டி ”பிள்ளையார் கதை” எழுதப்பட்டது.

நூல் அமைப்பு

எழுநூற்றுநாற்பத்து நான்கு அடிகளைக் கொண்ட பாடல். ஆசிரியப்பாவால் ஆனது. பிள்ளையார் காப்பு, துதி, சப்பாணி என்பவற்றோடு சரஸ்வதி துதியுடன் கதை ஆரம்பமாகிறது. பிள்ளையார் பெருமை, திருவிளையாடல், அவரை வழிபட்டு உயர்ந்தவர்கள் கதை ஆகியவை இந்நூலில் சொல்லப்படுகிறது.

பாடல் நடை

வெண்கரி முகமும் வியன்புழைக் கையோடு
ஐங்கர தவமும் மலர்ப்பாதம் இரண்டும்
பவளத்து ஒளிக்கோர் பைந்துவர் வாயும்
தவளக் கிம்புரித் தடருப்பு இரண்டும்
கோடி சூரியர் போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்

இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.