first review completed

வரதராச பண்டிதர்

From Tamil Wiki

வரதராச பண்டிதர்(வரதப்பண்டிதர்) (1656 - 1716) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், சோதிடர், வைத்தியர். பிள்ளையார் கதை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையரின் மகன். தமிழ் இலக்கியம், இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களில் புலமை படைத்தவர். ஜோதிடம், வைத்தியம் ஆகிய துறைகளைக் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வரதராச பண்டிதர் ‘வரககவி’ என்று அழைக்கப்பட்டார். அமுதாகரம் எனும் மருத்துவ நூலை எழுதினார். புராணம், தூது ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் எழுதினார். சிவராத்திரிபுராணம், ஏகாதசிப் புராணம், கிள்ளைவிடுதூது ஆகியவை இவர் எழுதிய சிற்றிலக்கிய நூல்கள். வரதப்பண்டிதர் எழுதிய ஆறு நூல்களைத் தொகுத்து இலங்கை அரசின் இந்து சமய கலாச்சாரத்திணைக்களம் 'வரத பண்டிதம்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டது. இந்நூல்களில் விரதத்தின் மகிமைகள், சைவ சமய மரபுகள் ஆகியவற்றை எழுதினார்.

மறைவு

வரதராச பண்டிதர் 1716-ல் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • சிவராத்திரிபுராணம்
  • ஏகாதசிப் புராணம்
  • பிள்ளையார் புராணம்
  • அமுதாகரம்
  • கிள்ளைவிடுதூது
  • பிள்ளையார் கதை

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.