under review

குமார விகடன்

From Tamil Wiki
Revision as of 20:41, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Kumara Vikatan. ‎

குமாரவிகடன்

குமார விகடன் (1934) தமிழில் வெளிவந்த தொடக்ககால பல்சுவை வணிக இதழ். மக்களை மகிழ்விக்கும் கேளிக்கை எழுத்துக்களை வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழின் முன்னோடி இந்த இதழ்தான். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஆனந்த விகடன் இவ்விதழையே பின்பற்றியது.

வெளியீடு

1934-ல் "உலகத்தார்க் கின்பநல மூட்டிடலே எஞ்ஞான்றும் உலகங் களிக்க உற்றேன் பராபரமே" எனத் தலைப்பிலிட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த இதழ். மக்களை ஈர்க்கிற வகையில் இதழை நடத்தியுள்ளது. தமாஷ், சிறுகதை, நாடகம், கார்டூன் படங்கள், விகட விளம்பரங்கள், ஒரு காமுகனின் தினக்குறிப்பிலிருந்து, சங்கீத மாநாடு, சரசாவின் தியாகம் என கேளிகை உள்ளடக்கம் கொண்டது. சிறுவர்களுக்காகவும் குட்டியானையும் குள்ளநரியும் எனப் படக்கதையும் வெளியிட்டுள்ளது.

இதன் ஆசிரியர்: சாமி, இவர் சிறுவர் இதழ்களையும் நடத்தியவர். துணை ஆசிரியர்கள் ச.து.சுப்பிரமணியம் (ச.து.சு. யோகியார்) ம.க.தணிகாசலம்.

உசாத்துணை


✅Finalised Page