being created

ஆண்டாள்

From Tamil Wiki
ஆண்டாள் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

ஆண்டாள் (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய கால கவிஞர். பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொன்மம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோயிலில் பூஜை செய்து வந்த விஷ்ணுசித்தரின்(பெரியாழ்வார்) வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வடபத்ரசாயி கோயில் தோட்டத்தில் துளசிச் செடியின் அருகில் கண்டெடுத்த குழந்தையை குழற்கோதை எனப் பெயரிட்டு வளர்த்தார்.

பெரியாழ்வாரின் பக்தி, பாடல்கள் வழி திருவரங்கத்துறை திருவரங்க நாதரை தன் நாயகராக எண்ணி ஆண்டாள் வாழ்ந்தார். வடபத்ரசாயிக்கு(ஆலிலைக் கண்ணன்) அணிவிக்கும் மாலையை தாம் அணிந்து கண்ணாடியில் பார்த்த பின் பெரியாழ்வாருக்குத் தெரியாமல் அதை கோவிலுக்கு அனுப்பினார். இறைவன் ஆண்டாள் அணிந்த மாலையை அணிந்ததால் ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி என்று அழைக்கப்பட்டாள். திருவரங்கநாதரை மணம் செய்ய மதுரை அழகர் கோவிலில் ஆண்டாள் நேர்ச்சை செய்தார்.

பிற பெயர்கள்
  • சூடிக் கொடுத்த சுடர்கொடி
  • கோதை நாச்சியார்
  • குழற்கோதை
  • ஆண்டாள்

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீரங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் பாடினார்.

ஆன்மிகம்

திருவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கு கோவில் உள்ளது. ஆண்டாளை தெய்வமாக வழிபடுகின்றனர். வைணவ மதத்தாரின் முக்கியமான கடவுள்.

மறைவு

தொன்மம்

விஷ்ணுசித்தரின் கனவில் ஸ்ரீரங்கத்தின் ரங்க நாதரின் ஒப்புதல் அளிக்க அவர் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீரங்கம் வரை சென்றார். பாண்டிய மன்னன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்காரம் செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி நடந்த ஆண்டாள் பங்குனி உத்திர நாளில் திருவரங்கம் கோயிலை அடைந்து அங்கு மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது.

நூல்கள்

ஆண்டாள் பற்றிய நூல்

  • அமுக்த மால்யதா (தெலுங்கு)

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.