சாம்ராஜ்

From Tamil Wiki
சாம்ராஜ்

சாம்ராஜ் (எஸ். சாம்ராஜ்) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.

பிறப்பு,கல்வி

மே 26 1972ல் மதுரையில் சோ.ரத்தினம், பங்கஜவள்ளி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி (வடக்கு) சென்னை, மதுரை, தியாகராசர் நன்முறை மேல்நிலைப்பள்ளி, , செளராஷ்டிரா மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். சாம்ராஜ் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புகொண்டு செயலாற்றியிருக்கிறார்

தனிவாழ்க்கை

ஜூலை 23 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டில் சரோஜாவை மணமுடித்தார். மகன் ஆரண்யா,மகள் டெசா

இலக்கிய வாழ்க்கை

இவரது முதல் படைப்பான - Saving Private Ryan ம் இரண்டாம் உலகப் போரும் என்னும் சினிமா விமர்சனம் 1999 ஆம் ஆண்டில் மக்கள் தளத்தில் வெளியானது.’என்றுதானே சொன்னார்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு பரவலாக பேசப்பட்டது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு பட்டாளத்து வீடு. இத்தொகுப்பின் பத்து கதைகளுமே வாழ்வில் பெரும் இழப்பை சந்தித்தவர்கள் அல்லது வாழ்வையே தொலைத்தவர்கள் பற்றியது எனலாம். முற்றிலும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்த வெவ்வேறு மனிதர்களை பற்றிய கதைகள் என்றாலும் இந்த எல்லா கதைகளையும் இணைக்கிற ஒரு புள்ளியாக இழப்பு இருக்கிறது. இழப்பைப்பற்றி மட்டுமல்ல, இழப்புக்கு பின்னால், துயரங்களுக்கு அப்பால் தொடரும் வாழ்வை குறித்தும் பேசுகின்றன சாம்ராஜின் கதைகள்.

தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென - தாஸ்தோய், தாஸ்தோவஸ்கி, ஆண்டன் செக்காவ் , கார்க்கி, புதுமைப்பித்தன், பா.சிங்காரம், அசோகமித்திரன், ஆ.முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

திரைவாழ்க்கை

இயக்குநர் ராமிடம் தங்கமீன்கள் மற்றும் பேரன்பு திரைப்படங்களிலும், மலையாள திரைப்படம் ஒழிமுறியிலும் பணியாற்றியிருக்கிறார்.மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘’திருடன் மணியன் பிள்ளை’’ நூலை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். தற்போது இயக்குநர் மிஷ்கினுடன் பணியாற்றுகிறார்.

நூல்பட்டியல்

சிறுகதை தொகுப்பு
  • பட்டாளத்து வீடு - 2015 - சந்தியா பதிப்பகம்
  • ஜார் ஒழிக - 2018 - நற்றிணை பதிப்பகம்
கவிதை தொகுப்பு
  • என்று தானே சொன்னார்கள் - 2013 - சந்தியா பதிப்பகம்
கட்டுரைத் தொகுப்பு
  • மூவந்தியில் சூலும் மர்மம்- 2022 - சந்தியா பதிப்பகம்
  • நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் - 2016 - நற்றிணை பதிப்பகம்

விருதுகள்

2013ல் ’’ என்று தானே சொன்னார்கள்’’ கவிதை தொகுப்பிற்காக ராஜமார்த்தாண்டன் விருது பெற்றார்.

இணைப்புகள்

  • விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • எத்தனை கைகள்! -சாம்ராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • சாம்ராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  • https://youtu.be/BAE-aJyvNLM
  • https://youtu.be/Fxt_Rjgm64E
  • சாம்ராஜ்: அனுபவமே கவிதையின் சாரம்: https://youtu.be/j3EJ2zWqSSk
  • சூரியனை நோக்கி பறக்கும் கவிதை - சாம்ராஜ் ~ கவிதைகள் (kavithaigal.in)
  • https://youtu.be/anvZ_s7C6CQ
  • https://youtu.be/pr4zwzRsrrQ
  • https://youtu.be/xoU9i1-_lPk
  • https://youtu.be/JzQTLyA-Gvo
  • https://youtu.be/HeapSKrD8n0
  • https://youtu.be/GpZRscD8u84
  • https://youtu.be/kzh0fewlb4s
  • https://youtu.be/VbdBEOVCcLE
  • https://youtu.be/j3EJ2zWqSSk
  • நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை – விசை (visai.in)
  • ஈரோடு சிறுகதை முகாம் - 2019: கவிஞர் சாம்ராஜ் அனுப்பிய குறிப்பும் கதைகளும் (erodeshortstorymeet.blogspot.com)
  • எந்தெந்த நாவலையெல்லாம் வெப்சீரிஸ் ஆக்கலாம்? பரிந்துரைக்கும் படைப்பாளிகள்! #WebSeries | Some Tamil Novels that can be converted as web series (vikatan.com)
  • “ஜார் ஒழிக: மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?” - நூல் விமர்சனம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
  • ஜார் ஒழிக - சாம்ராஜ் - நற்றிணை | panuval.com