வையாபுரி ஐயர்

From Tamil Wiki

வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார். வையாபுரி ஐயர் பிராமண சந்யாசி. சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாண வரலாற்று நூலான வையாபாடலை இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார்ர்.

நூல் பட்டியல்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை