வையாபுரி ஐயர்

From Tamil Wiki
Revision as of 16:31, 23 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். == வாழ்க்கைக் குறிப்பு == வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வையாபுரி ஐயர் (பதினைந்தாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வையாபுரி ஐயர் இலங்கை யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகல்லில் பிறந்த புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

யாழ்ப்பாண வரலாற்று நூலான வையாபாடலை இயற்றினார். வையாபாடலில் 105 செய்யுட்கள் உள்ளன. பிற செய்யுட்கள் கிடைக்கவில்லை.பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றினார்ர்.

நூல் பட்டியல்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை