ஆண்டாள்

From Tamil Wiki

ஆண்டாள் (பொ.யு. 7ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய கால கவிஞர். பன்னிரெண்டு வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொன்மம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயி கோயிலில் பூஜை செய்து வந்த விஷ்ணுசித்தரின்(பெரியாழ்வார்) வளர்ப்பு மகள் ஆண்டாள். ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வடபத்ரசாயி கோயில் தோட்டத்தில் துளசிச் செடியின் அருகில் கண்டெடுத்த குழந்தையை குழற்கோதை எனப் பெயரிட்டு வளர்த்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஸ்ரீரங்கமன்னாரை திருமணம் செய்வதற்காக மார்கழியில் நோன்பிருந்து ஆண்டாள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் பாடினார்.

மறைவு

தொன்மம்

விஷ்ணுசித்தரின் கனவில் ஸ்ரீரங்கத்தின் ரங்க நாதரின் ஒப்புதல் அளிக்க அவர் ஆண்டாளை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஸ்ரீரங்கம் வரை சென்றார். பாண்டிய மன்னன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை அலங்காரம் செய்தார். காவிரியின் தென்கரையில் இறங்கி நடந்த ஆண்டாள் பங்குனி உத்திர நாளில் திருவரங்கம் கோயிலை அடைந்து அங்கு மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது.

நூல்கள்

உசாத்துணை

  • ஆண்டாள் தமிழை ஆண்டாள்: தினமணி