கீதா பென்னட்

From Tamil Wiki

கீதா பென்னட் (-ஆகஸ்ட் 6, 2018) தமிழ் எழுத்தாளர், வீணை இசைக்கலைஞர்.

பிறப்பு, கல்வி

கீதா பென்னட் சங்கீத கலாநிதி ராமநாதனின் மகள். வீணை, வாய்ப்பாட்டு கற்றார். இசை நிகழ்ச்சிகளும் இசைப் பயிற்சியும் அளித்து வருகிறார். நாற்பது ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தார்.

தனி வாழ்க்கை

கீதா பென்னட் ஃப்ராங்க் பென்னட்டை திருமணம் செய்து கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

கீதா பென்னட் சிறுகதைகள் எழுதினார். ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர் மலர், இதயம் பேசுகிறது போன்ற இதழ்களில் கீதா பென்னட்டின் சிறுகதைகள் வெளியானது. ‘வேலைக்குப் போகும் மருமகள்’ என்ற சிறுகதை இலக்கிய சிந்தனை விருது பெற்றது. கீதா பென்னட்டின் ‘ஆதார சுருதி’ சிறுகதைத் தொகுப்பு கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. கல்கி, சுஜாதா ஆகியோர் கீதா பென்னட்டின் ஆதர்ச எழுத்தாளர்கள்.

இலக்கிய இடம்

தமிழகம், அமெரிக்கா இடையிலான கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தன் எழுத்துக்களில் பதிவு செய்தார்.

விருதுகள்

நூல்கள்

சிறுகதைகள்
  • ஆதார சுருதி

உசாத்துணை

  • Her strings have fallen silent: The Hindu

இணைப்புகள்