லதா

From Tamil Wiki

லதா(கனக லதா) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர்.

பிறப்பு, கல்வி

லதா இலங்கை நீர்க்கொழும்பில் பிறந்தார். சிங்கப்பூரில் வசிக்கிறார். நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1982இல் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார்.

தனி வாழ்க்கை

இதழியல்

தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

லதாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘தீவெளி’ 2003இல் வெளியானது. 2004இல் ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ கவிதைத் தொகுப்பு, ’நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியானது. கணையாழி, காலச்சுவடு, உயிர்நிழல், குங்குமம் போன்ற இதழ்களிலும் வல்லினம், தங்கமீன் போன்ற மின்னிதழ்களிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார். லதாவின் தீவெளி கவிதை நூல் தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பாடத் திட்டத்தில் சேர்கக்ப்பட்டுள்ளது.

இலக்கிய இடம்

"உள்ளார்ந்த கோபமும் தனிமையும் இவரது கவிதையின் முக்கிய புள்ளிகள். அன்றாட நிகழ்வுகள் மீதான விமர்சனமாகவும், அகநெருக்கடி மிக்க மனவலிகளையும் குறியீட்டு தளத்தில் நிறுத்தி அவரது கவிதைகள் பேசுகின்றன. இவரது கவிதையில் தொக்கி நிற்கும் அங்கதம் சிறப்பானது" என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • லதா எழுதிய ’நான் கொலை செய்த பெண்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2008இல் தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

நூல்கள்

கவிதை
  • தீவெளி (2003)
  • பாம்புக் காட்டில் ஒரு தாழை (2004)
நாவல்
  • The Goddess in the Living Room
சிறுகதைகள்
  • நான் கொலை செய்த பெண்கள்
இவரின் கவிதைகள் இடம்பெற்ற தொகுப்புகள்
  • கவிதைத் தொகுதி (சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக் கலைகள் மன்றம்) (1995)
  • நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பு (தேசியக் கலைகள் மன்றம்)(2000)
  • கனவும் விடிவும் (தற்காலத் தமிழ்ப்பெண் கவிஞர்கள், இந்திய சாகித்திய அகாதமி)

உசாத்துணை

இணைப்புகள்