விசுவநாத சாஸ்திரி

From Tamil Wiki

விசுவநாத சாஸ்திரி (விஸ்வநாதன்) (1756-1835) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். ஜோதிடர்.

வாழ்க்கைக் குறிப்பு

விசுவநாத சாஸ்திரி இலங்கை யாழ்ப்பாணம் அராலியில் நாராயண சாஸ்திரிக்கு மகனாக 1756இல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றார். ஜோதிட கணிதத்திலும் புலமையுடையவர்.

ஜோதிடம்

இலங்கையில் அக்காலத்தில் கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களுள் விசுவநாத சாஸ்திரியால் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. தன் குடும்பத்தில் ஒன்பது தலைமுறைகளாக கணிக்கப்பட்டு வந்த வான சாஸ்திரங்களைத் தொகுத்தார். இறக்கும்வரை ஆண்டுதோறும் பஞ்சாங்கம் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

விசுவநாத சாஸ்திரி சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். மாவைக்குறவஞ்சி, குருநாதர் கிள்ளைவிடு தூது ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

பட்டம்

இலங்கைத் தேசாதிபதி விசுவநாத சாஸ்திரிக்கு ’அரச கணிதர்’ பட்டத்தை வழங்கினார்.

மறைவு

விசுவநாத சாஸ்திரி 1835இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • வண்ணைக் குறவஞ்சி
  • நகுலமலைக் குறவஞ்சி
  • வாக்கிய கரண கிரகணம்

உசாத்துணை