விசுவநாத சாஸ்திரி

From Tamil Wiki

விசுவநாத சாஸ்திரி (விஸ்வநாதன்) (1756-1835) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். ஜோதிடர்.

வாழ்க்கைக் குறிப்பு

விசுவநாத சாஸ்திரி இலங்கை யாழ்ப்பாணம் அராலியில் நாராயண சாஸ்திரிக்கு மகனாக 1756இல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றார். ஜோதிட கணிதத்திலும் புலமையுடையவர்.

ஜோதிடம்

இலங்கையில் அக்காலத்தில் கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களுள் விசுவநாத சாஸ்திரியால் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. இறக்கும்வரை ஆண்டுதோறும் பஞ்சாங்கம் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

விசுவநாத சாஸ்திரி சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

பட்டம்

இலங்கைத் தேசாதிபதி விசுவநாத சாஸ்திரிக்கு ’அரச கணிதர்’ பட்டத்தை வழங்கினார்.

மறைவு

விசுவநாத சாஸ்திரி 1835இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • வண்ணைக் குறவஞ்சி
  • நகுலமலைக் குறவஞ்சி
  • வாக்கிய கரண கிரகணம்

உசாத்துணை