சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்
சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (ராஜகோபாலன்; ராஜாஜி; ராஜகோபாலாசாரியார்; சி.ஆர்; பிறப்பு: டிசம்பர் 10, 1878; இறப்பு: டிசம்பர் 25, 1972) வழக்குரைஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்த்திருத்தவாதி, அரசியல் கட்சித் தலைவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். சென்னை மாகாண முதல்வர்; மேற்கு வங்க ஆளுநர் எனப் பல பொறுப்புகள் வகித்தார். பாரத ரத்னா விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரியார், ஓசுர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில், சக்கரவர்த்தி ஐயங்கார்-சிங்காரம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 10, 1878-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். தந்தை கிராம முன்சீஃப் ஆகப் பணியாற்றினார். ஆரம்பக் கல்வியை திண்ணைப் பள்ளியில் பயின்றார். உயர்நிலைக் கல்வியை ஓசூரிலும், மேல்நிலைக் கல்வியை பெங்களூர் லண்டன் மிஷன் பள்ளியிலும் கற்றார். பெங்களூரில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துத் தேர்ந்தார்.
தனி வாழ்க்கை
சட்டம் பயின்ற ராஜாஜி, சேலத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்தார். நுணுக்கமாகப் பல வழக்குகளில் வாதாடி நற்பெயர் பெற்றார். அலர்மேலு மங்கையை மணம் செய்துகொண்டார்.
சமூக வாழ்க்கை
சேலத்தில் மூத்த வழக்குரைஞர் சேலம் விஜயராகவாசாரியாரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் அரசியலறிவு பெற்றார். சமூக சேவைகள் பலவற்றில் பங்கெடுத்தார். சேலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.
அரசியல் வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.