under review

ராஜம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 14:30, 8 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "ராஜம் (1986) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர். == பதிப்பு, வெளியீடு == 1986இல் சந்திரா ராஜசேகர் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. ’பெண் குலத்திற்குப் பெருமை சேர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ராஜம் (1986) பெண்களுக்கான தமிழ் மாத இதழ். சந்திரா ராஜசேகர் இதன் ஆசிரியர்.

பதிப்பு, வெளியீடு

1986இல் சந்திரா ராஜசேகர் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. ’பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்திடும் இதழ்’ Womens Monthly என்று தமிழ் மற்றும் ஆங்கில வாசகங்களுடன் பெண்ணை இதழின் சின்னமாக ”ர” என்ற எழுத்திற்குள் பெண் உருவத்தின் முகம் மட்டும் வைத்து வெளியிட்டது.

உள்ளடக்கம்

ராஜம் இதழில் பெண்களை மையாக வைத்தும் அவர்களின் வாழ்வுச் சிக்கல்களை மையமாகக் கொண்டும் சிறுகதைகள், நெடுங்கதைகள் வெளிவந்தன. பெண்களின் கலையார்வம், அறிவுத்திறன், சாதிக்கும் எண்ணம், ஆண்களைவிடப் பெண்கள் மேலான வலிமை பெற்றவர்கள், தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை, மணமுறிவுக்குப்பின் மணம் ஆண்களுக்கே என்ற உரிமையை மறுத்து இரு பாலாருக்கும் பொதுவென விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள் ராஜம் இதழில் வெளிவந்தது.

இலக்கிய இடம்

ஆண், பெண் சமம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கும் முயற்சிகளை ராஜம் இதழ் வெளிப்படுத்தியது.

உசாத்துணை

மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.