சுமங்கலி

From Tamil Wiki
Revision as of 12:12, 8 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "சுமங்கலி (1984) பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியாகும் இதழ். == வெளியீடு == சுமங்கலி இதழ் 1984இல் தொடங்கப்பட்டது. பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர். பெண்களின் முன்னேற்றத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சுமங்கலி (1984) பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியாகும் இதழ்.

வெளியீடு

சுமங்கலி இதழ் 1984இல் தொடங்கப்பட்டது. பராசக்தி சுமங்கலி இதழின் ஆசிரியர். பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு வெளியாகும் இதழ். சுமங்கலி , வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறை களை மகளிர்க்கு உணர்த்தவேண்டும் என்னும் அடிப்படையைக் குறிக் கோளாகக் கொண்டது . சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் பெண் களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும் என விழைந்தது .

இலவசச் சட்ட அறிவுரை , மருத்துவ அறிவுரை போன்ற பகுதி கள் மகளிர்க்குப் பெரிதும் பயன்படுவனவாகும் . சுமங்கலியில் வெளி யாகும் கட்டுரைகள் அனைத்தும் பெண்களுக்காகவும் அவர்களின் நிறைகுறைகளைக் கூறும் போக்கிலும் வெளியிடப்பெற்றுள்ளன. பல்வேறு துறைகளில் புகழ்பெற்று விளங்கும் மகளிரைப் பேட்டி கண்டு அவர்களைப் பற்றி வெளியிடப்பெற்ற சிறப்புக்கட்டுரைகள் படிப்போருக்கு ஊக்கம் தரும் . மகளிர் இவ்வகைக் கட்டுரைகளால் தன்னம்பிக்கை பெறுவர் .

சுமங்கலியில் வெளியான கட்டுரைகள் அனைத்தும் பெண்களை முதன்மைப்படுத்தி ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று கூறலாம் . இலவசச் சட்ட அறிவுரைப்பகுதி மகளிருக்குரிய பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்ப தற்குப் பெரும் உதவி புரிந்துள்ளது . மணமுறிவு பற்றிய சிக்கல் களுக்கும் பல்வேறு தீர்வுகளைச் சுமங்கலி இதழ் தந்துள்ளது . இவ்விதழ் தொடர்ந்து வெளிவந்திருந்தால் மகளிர்க்குப் பெரிதும் பயன்பட்டிருக்கக்கூடும் .

உள்ளடக்கம்

இலக்கிய இடம்

உசாத்துணை

மகளிர் இதழ்கள்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: இதழியல் ஆய்வு தொகுதி 9: முனைவர் சா. கிருட்டினமூர்த்தி