மீரான் முகைதீன்

From Tamil Wiki

மீரான் முகைதீன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். முஸ்லிம் ஆளுமை.

வாழ்க்கைக் குறிப்பு

மீரான் முகைதீன் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் செய்யிது முகம்மது பலீலிடம் கல்வி பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

மீரான் முகைதீன் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவங்களை வினாவிடையாக விளக்குகின்ற 'சன்மார்க்க இலகுபோத வினாவிடை’ நூலை இயற்றினார். இந்நூலிலுள்ள மேற்கோள்கள் அரபு மொழியில் உள்ளன.

நூல் பட்டியல்

  • சன்மார்க்க இலகுபோத வினாவிடை

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆளுமை:மீரான் முகைதீன்: noolaham