சி. செல்லையாபிள்ளை

From Tamil Wiki

சி. செல்லையாபிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சி. செல்லையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் நொத்தாரிசு சின்னத்தம்பிக்கு மகனாகப் பிறந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள முருகன் திருக்கோயில்களுள் ஒன்றான கந்தவன ஆலயத்தின் ஆதீனகர்த்தராக அக்கோயிலின் பூசைகள், விழாக்கள் ஆகியவற்றை நடத்தினார். சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் பெரிய புராணத்திலும் புலமை கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

சி. செல்லையாபிள்ளை துகளறுபோதத்துக்கு உரை வகுத்து வெளியிட்டார். பெரியபுராணம், கந்தபுராணம் ஆகியவை புராணப் பாடமாகப் படிக்கப்படும் கோயில்களுக்குச் சென்று பயன் சொல்லியும் விரிவுரையாற்றியும் வந்தார். பெரிய புராணத்திலுள்ள சிறந்த பாடல்கள் பலவற்றுக்கு உரை விளக்கங்கள் எழுதினார்ர்.

நூல் பட்டியல்

  • துகளறுபோதம் உரை
  • தேகவியோகத்தைக் குறித்த கவிகள்

உசாத்துணை