108 வைணவ திவ்ய தேசங்கள்
From Tamil Wiki
108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை, ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.
திவ்ய தேச அமைப்பு
108 திவ்யதேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.
திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.
- சோழநாட்டுத் திவ்யதேசங்கள் - 40
- நடுநாட்டுத் திவ்யதேசங்கள் - 2
- தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் - 22
- வடநாட்டுத் திவ்யதேசங்கள் - 11
- மலைநாட்டுத் திவ்யதேசங்கள் - 13
- பாண்டியநாட்டுத் திவ்யதேசங்கள் - 18
- நில உலகில் காணமுடியாத திவ்யதேசங்கள் - 2