Tamil Wiki:Tamil review checklist
தலைப்பு - Title
- பெயர்களை அளிக்கும் பொழுது, கீழுள்ள முறையை பின் பற்ற வேண்டும்:
- "INITIAL-DOT-SPACE-NAME" அல்லது "INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME"
- எ.கா: ஆர். சண்முகசுந்தரம், டி.எஸ். துரைசாமி
- டைட்டில்-தலைப்புகளில் quotation marks இருப்பதை கூடுமானவரையில் தவிர்க்கவும்
தேதிகள்
- தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.
- பிறப்பு இறப்பு தேதிகள் குறிப்பிடப்படவேண்டும்
முதல் பத்தி
- [[
நாம் "நமக்கு" போன்ற சொற்கள் இருக்கக்கூடாது "என்று கூறலாம்" – என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது "தற்போது" போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு. ஆகவே "குழந்தைகளின் வயது" குறிப்பிடக்கூடாது. எவருடைய வயதும் சொல்லப்படலாகாது [பிறந்த ஆண்டு சொல்லலாம்] "இவரது", "அவருடைய" போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும் ‘முத்திரை பதித்தார்’ ‘சாதனை புரிந்தார்’ போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது. ‘இவருக்கு தேசப்பற்று மிகுதி’ ‘இவர் மிகக்கடுமையான உழைப்பாளி’ போன்ற வரிகள். 'மிகையான கிளெயிம்' இருக்கக்கூடாது. ‘தமிழிலக்கியத்தின் தலைசிறந்த’ ‘ஒப்பாரும் மிக்காரும் இல்லாத’ போன்ற வரிகள் விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. ‘இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார்’ ‘இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை’ போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும். மேலே சொன்ன கருத்தையே ‘இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர்’ ‘பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்’ என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது 'புதினம்', 'திங்கள்', 'அகவை' போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். 'நாவல்', 'மாதம்', 'வயது' போன்றவை போதும்.