குமாரசிங்க முதலியார்

From Tamil Wiki
Revision as of 16:57, 18 October 2022 by Ramya (talk | contribs)

குமாரசிங்க முதலியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், ஆசுகவி, ஆயுள்வேத மருத்துவர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரசிங்க முதலியார் மன்னார் பகுதியைச் சார்ந்த மாதோட்டத்தில் நாவற்குளம் ஊரில் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்கள் கற்றார். ஆயுள்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

1800-ல் "பூஞரக்குத்தகை" என்ற அரசாங்க வரிக்காக பொதுமக்கள் புரட்சி செய்தார்கள். குமாரசிங்க முதலியாரின் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் அவருக்கு குற்றவாளியாகக் கருதி கசையடி தீர்ப்பளிக்கப்பட்டது. கத்தோலிக்க கிறித்தவரான குமாரசிங்க முதலியார் தேவமாதா பேரில் ஆசுகவியாக பல பாடல்கள் பாடினார். இவர் பாடிய கீர்த்தனங்கள் வழக்கிலுள்ளன.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை