குமாரகுலசிங்க முதலியார்

From Tamil Wiki

குமாரகுலசிங்க முதலியார் (1826-1884) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரகுலசிங்க முதலியார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழை என்னும் ஊரில் அமெரிக்கமிஷன் உபதேசியாராய் இருந்த சோடன் என்பவருக்கு மகனாக 1826-ல் பிறந்தார். வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்றார். அரசாங்கப் பணியாற்றினார். மல்லாகம், யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் பேச்சு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆதியன பல இவராற் பாடப்பட்டுள்ளன. "பதிவிரதை விலாசம்’ என்னும் நாடக நூலினை இவர் இயற்றியுள்ளார்.

மறைவு

குமாரகுலசிங்க முதலியார் 1884-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • பதிவிரதை விலாசம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை