standardised

கீத்தாம்பிள்ளை

From Tamil Wiki

கீத்தாம்பிள்ளை (பதினெட்டாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர். நாடக நூல்கள் பல இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கீத்தாம்பிள்ளை இலங்கை மன்னர் பகுதியில் பிறந்தார். ’மன்னர் மாதோட்டம் இலந்தைவான் கீத்தாம் பிள்ளைப் புலவர்' என்றும் அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

எருமை நாடகம், நொண்டி நாடகம், எம்பிரதோர் நாடகம், புரிசீனகன்னி நாடகம், நாய் நாடகம் ஆகிய நூல்களை இயற்றினார்.

மறைவு

கீத்தாம்பிள்ளை பொ.யு 1800 வரை வாழ்ந்தவர்.

நூல் பட்டியல்

  • எருமை நாடகம்
  • நொண்டி நாடகம்
  • எம்பிரதோர் நாடகம்
  • புரிசீனகன்னி நாடகம்
  • நாய் நாடகம்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.